Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம் பொதினேனியின் RAPO19 படப்பிடிப்பு ஜூலை 12 முதல்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் தமிழின் முக்கிய இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் உருவாவது அனைவரும் அறிந்த செய்தி. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் துவங்கவுள்ளது.

நடிகர் ராம் வரும் ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது. பெரும் இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ராம்.

ரசிகர்கள் குதூகலித்து கொண்டாடும் படியிலான கமர்ஷியல் படங்களை தருவதில் வல்லவர் இயக்குநர் லிங்குசாமி. அவர் உருவாக்கத்தில் இப்படத்தின் திரைக்கதையை கேட்டவுடன் ராம் ஆனந்த்தில் திளைத்து மகிழ்ந்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற Drishyam மற்றும் Lucifer படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் RAPO19 படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். KGF படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த, அன்புமணி, அறிவுமணி சுருக்கமாக அன்பறிவு எனப் பெயர் பெற்ற கூட்டணி இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற தெலுங்கு படமான Krack படத்தில் வசனத்தில் கலக்கிய Sai Madhav Burra இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகிறார். Jersey படத்திற்காக தெசிய விருதை வென்ற Naveen Nooli இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். DY சத்யநாரயணா கலை இயக்கம் செய்கிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரும் தொழில் நுட்ப குழு இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தில் ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.


பன்மொழியில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்படுகிறது.

Related posts

பயர் (பட விமர்சனம்)

Jai Chandran

Iswarya Murugan Releasing soon !

Jai Chandran

New Zealand bred Indian girl debuted in Telugu Film

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend