Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராஜா சாப் (பட விமர்சனம்)

படம்: ராஜா சாப்

நடிப்பு: பிரபாஸ், சஞ்சய் தத், பூமன் இராணி, மாளவிகா மோகன், நிதி அகர்வால், ரித்தி குமார், ஜரினா வாகப்

தயாரிப்பு: டிஜி விசுவ பிரசாத், கிருத்தி பிரசாத்

இசை: தமன் எஸ்

ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி

இயக்கம்: மாருதி

பிஆர்ஓ: சதீஷ் (AIM)

ராஜ சமஸ்தானத்தின் வாரிசாக இருக்கும் கங்கா தேவியை (ஜரீனா வஹாப்) பிச்சைக்காரன் ஒருவன் (சஞ்சய் தத்) கைப்பிடித்து சொத்துக்களை அடைய எண்ணுகிறான்.
இதற்காக மாய வசிய வித்தைகளை கற்று கங்காதேவியை கைப்பிடிக்கிறான். சொத்துக்களை சுருட்டிக்கொண்டு ஓடி விடுவதால் கங்கா தேவி சமஸ்தானத்திலிருந்து விரட்டப்படுகிறார். வயது முதிர்ந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக பேரன் (பிரபாஸ்) மட்டுமே இருக்கிறான். கங்கா தேவி இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்ட விவரத்தை அறிந்த பேரன்  அந்த சொத்துக்களை மீட்டு மீண்டும் பாட்டியிடம் ஒப்படைக்க சபதம் செய்து புறப்படுகிறான் அது நடந்ததா? என்பதற்கு அமானுஷ்ய விஷயங்களுடன் பதில் அளிக்கிறது படம்.

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் பிரம்மாண்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் பிரம்மாண்ட படமாக உருவாகி இருக்கிறது ராஜா சாப்.

அமானுஷ்ய கதைகள் என்றாலே அதில் பேய், ஆவிகள், மர்ம பங்களா போன்றவை இடம்பெறும் அந்த பிராபர்ட்டிஸ் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது கூடுதலாக சமஸ்தான கதை என்பதால் வைரம் வைடூரியம், தங்கம் , தங்க மாலைகள், தங்கக் கட்டிகள் என அரண்மனை கஜானா நிர்மாணிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கண்களை கவர்கின்றன.

ரசிகர்களை குதுகலப்படுத்தும் வகையில் டிசைன் டிசைன் சட்டைகள், அதிரடி ஆக்சன் காட்சிகள், ஒன்றல்ல இரண்டல்ல மாளவிகா மோகன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கவர்ச்சி கதாநாயகிகளுடன் ஆட்டம் போட்டு அமர்க்களபடுத்தியிரு க்கிறார் பிரபாஸ். இளவட்டங்களுக்கு இளமை விருந்து.

சஞ்சய் தத்தின் மர்ம மாளிகைக்குள் நுழையும் பிரபாஸ், மாளவிகா மோகன், நிதி அகர்வால் போன்றவர்கள் சிக்கிக்கொண்டு அங்கிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கும் காட்சிகள் காமெடி களமாக மாற்றப்பட்டிருப்பது குழந்தைகளையும், பெண்களையும் கலகலப்பில் ஆழ்த்தும்.
பிரபாசின் பாட்டியாக வரும் ஜரீனா வஹாப் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

டிஜி விசுவ பிரசாத், கிருத்தி பிரசாத் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

தமன் எஸ் இசை வழக்கம் போல் ஜமாய்க்கிறது. பாடலின் வேகம் நடனத்திலும் காட்டி இருந்தால் கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கும் .

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு ஒ கே.

இயக்குனர் மாருதி டென்ஷன் இல்லாத ஜாலியான ஒரு அமானுஷ்ய படத்தை வழங்கி இருக்கிறார்.

ராஜா சாப் – மாயம், மந்திரம், கவர்ச்சி, கலகலப்பு.

Review By
k.Jayachandhiran
trending cinemas now.com

 

Related posts

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்

Jai Chandran

EvandaEnakkuCustody OUT NOW

Jai Chandran

When the special glimpse video of RadheShyam will launch! Breathtaking poster of ‘Darling’ Prabhas

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend