Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் (பட விமர்சனம் )

படம்: பியார் பிரேமா கல்யாணம்

நடிப்பு: இளன், சான்வி மேக்னா, ராதிகா, கீதா கைலாசம், எம் எஸ் பாஸ்கர், யோகிபாபு, இளங்கோ குமரவேல், செந்தில், மாறன்

தயாரிப்பு: ஸ்ரீ நிதி சாகர்

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு :தினேஷ் கே பாபு

இயக்கம் : இளன்

ரிலீஸ் : நெட் ஃப்ளிக்ஸ் OTT தளம்

பி ஆர் ஒ  யுவராஜ்

கதை : துபாயில் வேலை பார்க்கும் இளன் தனது குடும்பத்தை பிரிந்திருக்க முடியாது என வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊர்  திரும்புகிறான். குடும்பத்தினர் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் பார்க்க அனுப்புகிறார்கள். அவனோ இன்ஸ்டா இன்புளுயன்சராக இருக்கும் பவி (சான்வி மேக்னா i )மீது காதல் கொகிறான். ஒரு வழியாக இவர்களுக்கு திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்த அதே மேடையில் பிரச்னையும் தொடங்கி விடுகிறது. மாப்பிள்ளை வீட்டில் போய் வாழ மாட்டேன் என் வீட்டில் தான் மாப்பிள்ளை வந்து வாழ வேண்டும் என பவி பிடிவாதமாக  சொல்கிறாரள். அதை ஏற்று இளன்,  பெண் வீட்டிற்கு பெட்டிப் படுக்கையுடன்  வருகிறான். வாழ வந்த இடத்தில் அவன் பட்ட அவஸ்தைகள் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

இளம் நடிகர் இளன் புது மாப்பிள்ளையாக நடித்திருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார்  ரொம்ப போட்டு மண்டையை உடைத்து கொள்ளாமல்  எதார்த்தமான காட்சிகளை படத்தில் அமைத்திருப்பதால்  அது எல்லோர் வீட்டிலும் நடக்கும் காட்சி போலவே கண்களில் அரங்கேறுகிறது.

“நான் உன் வீட்டிற்கு வர மாட்டேன், வேண்டுமானால் நீ என் வீட்டில் வந்து வாழ் ” என சான்வி இளனுக்கு கண்டிஷன் போட அவரும் ஓகே சொல்லிவிட்டு பெட்டி படுக்கையுடன்  சான்வி வீட்டுக்கு வலது கால் வைத்து வாழ வருவது வித்தியாசமான காட்சி.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் என்று சொல்வது போல் வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு படா ஜோராக  ராதிகா விருந்து வைத்து கவனிப்பதும் நாட்கள் செல்லச் செல்ல வீட்டு மாப்பிள்ளையை வேலைக்காரனாக மாற்றும் யுக்தி தனக்கு கைவந்த கலை என்பது போல் ராதிகா அசால்டாக செய்துவிட்டு செல்கிறார். இளனும் சோறு கிடைத்த இடம் சொர்க்கம் என்பது போல் ஜாலியாக டிவி பார்த்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு காலத்தை கழிக்க தொடங்குவது இது ஒரு கட்டத்தில் மோதலில் தான் போய் நிற்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. எதிர்பார்த்த அந்த மோதல் நடப்பது எப்படி என்பது தான் காட்சிகளின் சுவாரசியம.

இன்ஸ்ட்டா இன்புலியன்சர் பவியாக வரும்  சான்வி மேக்னா புதுமை பெண்ணாக வருவார் என்று நினைத்தால்  கடைசியில் எதுவோ கெட்டா குட்டிcச் சுவரு கதையாகி விடுவது  ஏமாற்றம். .இன்னும் கூட சிந்தித்து  நல்லதொரு கிளைமாக்ஸ் வைத்திருந்தால் எஃபக்டிவாக இருந்திருக்கும்.

கண்டிப்பான அப்பாவாக  வரும் எம்எஸ் பாஸ்கர், மகனை நினைத்து உருகும் தாயாக கீதா கைலாசம், அடாவடி அத்தையாக ராதிகா, சைலன்ட் மாமனாராக இளங்கோ குமரவேல் நடித்திருக்கிறார்கள்.

படத்தை ஸ்ரீ நிதி சாகர் தயாரித்திருக்கிறார்

யுவன் சங்கர் ராஜா இசை காட்சிகளை டிஸ்டர்ப் செய்யவில்லை.

திருமண கலாட்டாவாக  காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தினேஷ் கே பாபு.

ஹீரோவாக இயக்குனராக இளன் பாஸ் மார்க் வாங்குகிறார்.

பியார் பிரேமா கல்யாணம் – பெண் வீட்டில் வாழ வரும் மாப்பிள்ளை காமெடி..

Review by

K Jayachandhiran

www.Trending cinemas now.com

 

 

.

Related posts

கார்த்தியின் #உழவன்பவுண்டேசன்்சீரமைக்கும் வீசாடிக்குளம்

Jai Chandran

Allu Arjun Campaigns Against Smoking;

Jai Chandran

பொங்கல் கொண்டாட வருகிறான் “மெட்ராஸ்காரன்”  

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend