தளபதி விஜய் உத்தரவின்படி..அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்து வழிகாட்டுதல்படி…புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு *ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ்* வழங்கப்படும் பொருட்களை புதுச்சேரி மாநில செயலாளர் ஜி.சரவணன் வழங்கினார்.
இவ்விழாவினை புதுச்சேரி மாநில அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் ஏற்பாடு செய்தார். மேலும் இவ்விழாவில் ராஜ்பவன் தொகுதி தலைவர் பரதீபன், நிர்வாகிகள் உழவர்கரை நிரேஷ், மண்ணாடிப்பட்டு அற்புதராஜ், சக்திவேல் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி நிர்வாகிகள் ரவி, ஜெகதீஷ், செல்வா, சுனில், மது, சிவா, சந்துரு, தமிழ், விஷ்வா ஆகியோர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.