பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் மனைவியும், சிலம்பரசன் டி.ஆர் தாயுமான உஷா ராஜேந்தரின் டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.
கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.
மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக கூறியதும், வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.
தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.