கடந்த 2018ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில்வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக் கதைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் இப்படம் ரீமேக் ஆகிறது என்று அறிவிக் கப்பட்டாலும் டைட்டில் ஜனவரி 1ம் தேதி அறிவிப்ப தாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு அந்தகன் என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கி றார். தியாகராஜன் தயாரிக்கி றார். கார்த்திக் முக்கிய வேடத் தில் நடிக்கிறார்.
ஆயுஷ்மான் குரானா இந்தியில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில்
பிரசாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். பியானோ இசை கலைஞர் வேடம் ஏற்றிருக்கும் பிரசாந்த் கிறிஸ்துமஸ் தினத்தன்று பியானோ இசைத்து அதை வீடியோவாக வெளியிட்டிருந் தார். லண்டன் இசைக் கல்லூரி யில் பியானோ இசை கிரேட் 4 முடித்தவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தாதுன் ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு தபுவின் கதாபாத்திரமும் முக்கிய மானது. இந்தியில் தபு ஏற்று நடித்த வேடத்தை தமிழில் சிம்ரன் ஏற்று நடிக்கிறார்.