வருடக்கணக்கில் காதலிக்கும் ஜோடிகள் திரையுலகில் பல உண்டு. அந்த வரிசையில் மம்மூட்டி நடித்த மாமாங்கம் படத்தில் நடித்த பிராச்சி தெஹலான் தனது 7 வருட காதலன் ரோஹித் சரோஹா வரும் 7ம் தேதி டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொள்கிரார்.
பிராச்சி தேசாய் ஒரு கைப்பந்து வீராங்கணையும் ஆவார். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார், மணமகன் ரோஹித் சரோஹா ஒரு தொழில் அதிபர் மற்றும் டெல்லி வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் ஆவார்.
திருமணம் குறித்து பிராச்சி கூறியது:
நிச்சயதார்த்தம், திருமணம் இரண்டையும் ஒரே நாளில் நடத்துகிறோம். காலையிலும் நிச்சய தார்த்தம், மாலையில் திருமணம். கொரோனா எச்சரிக்கை காரணமாக இரண்டு விழாவிற்கும் தலா 50 பேரை மட்டும் அழைத்துள்ளோம். அவர்களுக்கான மாஸ்க் அணிந்து வருவார்கள் இல்லா விட்டாலும் மாஸ்க் மற்றும் சானிடிசர்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்
இவ்வாறு பிராச்சி தெஹலான் தெரிவித்தார்.