Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர் !

ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவரது ஸ்டைல், உடை, தோற்றம் அனைத்தும் நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவரது ஸ்டைலிஸ்ட் ஜாவி தாகூர் தான். முன்னணி ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனராக மும்பையில் பணியாற்றி வரும் ஜாவி தாகூர் தான், கடந்த ஏழு வருடங்களாக  பிரபுதேவாவின் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். பிரபுதேவாவின் தோற்றத்தை முழுதுமாய் மாற்றியமைத்து, நவீன பாணி ஸ்டைலில் அவரை வடிவமைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான “பஹீரா” படத்தின் டீஸரில் பிரபுதேவாவை அவர் வடிவமைத்திருந்த விதம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது.

இது குறித்து ஜாவி தாகூர் தெரிவித்ததாவது…

நான் புதுமையாக பல விசயங்களை முயற்சித்து பார்க்க பெருந்தன்மையுடன் இடம் தந்த இயக்குநர் ஆதிக் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் பிரபுதேவா ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட, 10 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார். ஒவ்வொரு தோற்றமும் அதற்குரிய தனித்தனமையுடன் தெரியும்படி வடிவமைத்தோம். ஒவ்வொரு பாத்திரத்தின் தோற்றத்தை, வடிவமைத்தது மிக சவாலானாதாக இருந்தது. இறுதியாக இப்போது டீஸருக்கு குவிந்து வரும் பாராட்டுகள், பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிரபுதேவாவுடன் பணியாற்றுவது எப்போதும் அலாதியான அனுபவம். சவாலான பணியாக இருந்தாலும் இனிமையான அனுபவமாக இப்படம் இருந்தது.

“பஹீரா” தவிர்த்து  தேவி, யங் மங் சங், லக்‌ஷ்மி மற்றும் குலேபகாவலி படங்களிலும் பிரபுதேவாவிற்கு ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார் ஜாவி தாகூர்.
அந்த அனுபவம் குறித்து கூறும்போது…
ஒவ்வொரு படமும் அதனளவில் நிறைய சவால்களை கொண்டதாகவே இருந்தது. யங் மங் சங் படத்தில் பழைய காலத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக பிரபுதேவா நடித்துள்ளார். அப்படத்தில் அவரின்
தோற்றத்தை வடிவமைக்கும் பொருட்டு நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். குறிப்பிட்ட காலத்தில் சைனாவில் நிலவிய ஸ்டைலை அவருக்காக வடிவமைத்தோம். ஒவ்வொரு படமும் நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. பிரபுதேவா தவிர்த்து தமிழில் ஆர் ஜே பாலாஜி மற்றும் அஷ்வின் ஆகியோருக்கும் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறேன். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்.

பிரபுதேவா அவர்களுடன் நிகழ்ச்சிகளில் பணியாற்றுவது குறித்து கூறும்போது…

நிகழ்ச்சிகள் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நிகழ்ச்சிகளை பொருத்தவரை நிகழ்ச்சியின் மையக்கருத்து மற்றும் பிரபலத்தின் சௌகர்யத்தை பொருத்து அதற்கேற்றவாறு, அவருக்கான தோற்றத்தை வடிவமைப்போம். நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் பிரபுதேவா அவர்களுடன் நிகழ்ச்சிக்கு முன்னதாக கண்டிப்பாக ஒரு கலந்துரையாடல் நிகழ்த்துவேன். அப்போது நாம் என்ன செய்ய போகிறோம் என்கிற தெளிவு வந்துவிடும்.  அதன் பிறகே அவரது ஸ்டைலை வடிவமைப்பேன்.  இறுதியாக எப்போதும் நாம் நேசிக்கும் பணியை விரும்பி செய்யும் போது அது முழு திருப்தியை தந்துவிடும்.

Related posts

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”

Jai Chandran

Dikkiloona Sneak Peek Out Now!

Jai Chandran

வனம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend