Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போர் (பட விமர்சனம்)

படம்: போர்

நடிப்பு: காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா, பானு, மெர்வின் ரோசாரியா

தயாரிப்பு: டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா

இசை: துருவ் விஸ்வநாத், சஞ்சித் ஹெக்டே, கௌரவ்

ஒளிப்பதிவு: ஜிம்சி காளித், பிரிஸ்லே ஆஸ்கர் டி சோசா

இயக்கம்: பிஜய் நம்பியார்

பி ஆர் ஒ: சதீஷ்குமார்

பல்கலைக்கழக மாணவர்களில் இறுதியாண்டு படிக்கும் சீனியர் மாண வர்கள் புதிதாக சேரும் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்கின்றனர். சொல்பேச்சு கேட்காதவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். ஜூனியர் மாணவராக சேரும்  காளிதாஸ் ஜெயராம்  சீனியர் மாணவர்களை எதிர்த்து கேள்வி கேட்கிறார். கோபத்தில் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். காளிதாசின் இந்த செயலை சீனியர் மாணவர் அர்ஜுன் தாஸ் தட்டி கேட்கிறார். இதனால் இரு தரப்புக்கும்  மோதல் போக்கு ஏற்படுகிறது. அடிக்கடி  மோதலும் நடக்கிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தாஸ் தன்னை சிறிய வயதில் சக மாணவர்களிடம் மாட்டிவிட்டு அடிவாங்க செய்தவர் என்பதை காளிதாஸ் ஜெயராம் அறிந்து கொள்கிறார் . இதனால் அர்ஜுன் தாஸ் மீது காளிதாசுக்கு கோபம் அதிகமாகிறது. சிறு வயது கோபத்தை தற்போது தீர்த்துக் கொள்ள முடிவு செய்கிறார். இந்நிலையில் கல்லூரி விழா நடக்கிறது. அந்த விழாவை நடத்துவதற்காக ஜூனியர் மாணவரிடம் நிர்வாகம் பொறுப்பை ஒப்படைக்கிறது. அதற்கு சீனியர் மாணவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் காளிதாஸ் அதை விடுவதாக இல்லை. எவ்வளவு சீனியர் மாணவர்கள் வந்தாலும் அவர்களை எதிர்த்து விழாவை நடத்தியே தீருவேன் என்று சபதம் செய்கிறார். இந்நிலையில் விழா முடிந்தவுடன் ஜூனியர் மாணவர் களை தாக்குவதற்காக சீனியர் மாணவர்கள் தயாராகின்றனர். விழா முடிந்ததும் ஜூனியர் மாணவர்களுக்கும், சீனியர் மாணவர்களுக்கும் ஒரு போர் தொடங்குகிறது இதன் முடிவு என்னவாகிறது என்பதற்கு விறுவிறுப்பாக கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

காளிதாஸ் ஜெயராமை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இதற்கு முன் பார்த்ததில்லை. கல்லூரியில் ஜூனியர் மாணவராக வந்து சேரும் காளிதாஸ் சீனியர் மாணவர்கள் செய்யும் ரேகிங்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை அடித்து ஆஸ்பத்திரி யில் படுக்க வைப்பது கலகலப்பு காட்சியாக இருந்தாலும் இனிமேல் ஜூனியர்கள் கதி என்ன ஆகுமோ என்ற பதற்றத்தை படர விடுகிறது.

அர்ஜுன் தாஸ் குரல் மட்டும் வித்தியாசம் இல்லை அவரது நடிப்பும் வித்தியாசமாகவே இருக்கிறது. எந்நேரமும் கோபத் துடனே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த கோபம் அடிதடியிலும் வெளிப்படுகிறது.

படத்துக்கு போர் என்று இயக்குனர் விஜய் நம்பியார் டைட்டில் வைத் திருக்கிறார். அந்த காட்சியை கிளைமாக்சில் நிகழ்த்திகாட்டி இருக்கிறார். சீனியர் மாணவர்களும் ஜூனியர் மாணவர்களும் திறந்த வெளி திரையரங்கு மைதானத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் கண்முன் போரைத்தான் நிகழ்த்திக் காட்டுகிறது.

சிறு வயது பகையை தீர்த்துக் கொள்ள எண்ணும் காளிதாஸ், அர்ஜுன் தாசை பொளந் தெடுப்பதும் “இப்போதாவது உன் கோபம் தீர்ந்ததா?” என்று கேட்டபடி அர்ஜுன் தாஸ் காளிதாசிடம் அடி வாங்குவதும் ஒரு பக்கம் ஆத்திரத்தின் வெளிப்பாடும், இன்னொரு பக்கம் நட்பிற்காக அர்ஜுன் தாஸ் கேட்கும் மன்னிப்பின் அடையாளமாகவும் மனதை நெகிழ வைக்கிறது.

படத்தில் கதாநாயகிகளாக சஞ்சனா நடராஜன், டிஜே பானு நடித்திருக்கின்றனர். கொடுத்த வேலையை பொறுப்பாக தலை மேல் சுமந்து நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர இன்னும் பெயர் தெரியாத, முகம் அறிமுகம் இல்லாத பலர் தங்களது இயல்பான நடிப்பை வெளிப் படுத்தி படத்திற்கு உண்மையான ஈடுபாட்டை காட்டி நடித்து காட்சி களை மெருகேற்றி இருக்கின் றனர்.
போர் என்று டைட்டில் வைத்து விட்டு அதற்காக சுதந்திர போரை யோ அல்லது மன்னர்கள் போரை யோ நாடிச் செல்லாமல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையப்படுத்தி இருக்கும் இயக்குனர் பிஜய் நம்பியாரின் புத்திசாலித்தனம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

வெறும் சீனியர், ஜூனியர் மாணவர்கள் மோதல் என்றில் லாமல் அதில் அரசியலையும் ஜாதி பாகுபாடுகளையும் கொண்டு வந்து ஒரு சமுதாய கருத்து பேசி இருப்பது படத்தை மேலும் பண்படுத்துகிறது.

ஒளிப்பதிவும் சரி, இசையும் சரி படத்திற்கு பெரிய பிளஸ்.

டி சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.

போர்- மாணவ கலவரம்.

Related posts

Vijay Deverakonda, Puri Jagannadh, Charmme meets Chiru, Salman

Jai Chandran

Sabhaapathy releasing in theaters near you on Nov 19

Jai Chandran

ராமர் பாலம் பட விமர்சனம் (Ram Sethu Movie Review)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend