Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார்..

மூத்த  இந்தி நடிகர் திலீப் குமார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98.

இந்தியில் பிளாக் அண்ட் ஒயிட் காலம் தொடங்கி சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவர் இந்தி நடிகை சயிரா பானுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இணைபிரியாத தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வந்தனர்
கடந்த சில ஆண்டுகளாகவே திலீப் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவருககு கடந்த ஓரு மாத மாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. மருத்து வமனைக்கு அழைத்து செல்வதும் வீட்டுக்கு அழைத்து வருவதுமாக இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி காலை மணி அளவில் மரணம் அடைந் தார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
திலீப் குமார் மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகல் ஈ ஆசம் படம் மூலம் பிரபலமான திலீப்குமார் ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் பின்னர் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சோகமான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்ததால் இவரை டிராஜடி கிங் என்று இந்தி ரசிகர்கள் அழைத்தனர்

Related posts

ZEE5-ல் குழந்தைகளுக்கான புராண அணிமேஷன் தொடர்..

Jai Chandran

இயக்குனர் வெங்கட் பிரபு நன்றி கடிதம்

Jai Chandran

டார்க் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend