Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

“பசும்பொன் தேவர் வரலாறு” நாளை முதல் டிரெய்லர்…

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம்.

அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது.

முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 மணிக்கு “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

நீண்டகாலம் விளம்பர துறையில் கோலோச்சிவரும் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராக பணியாற்றிய எம்.பி.ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்று படத்துக்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் மக்கள் தொடர்பு – நிகில்முருகன். பின்னணி குரல்- நடிகர் வாகை சந்திரசேகர் MLA. பாடல்கள் – யுகபாரதி. எடிட்டிங் – தணிகாசலம். இசை – விஜய் ஆண்டனி. ஒளிப்பதிவு – ஜீவா ஷங்கர். நிர்வாகம்,ஆவணங்கள் சேகரிப்பு – மோனிதா. எழுத்து – இயக்கம் – எம்.பி.ஆபிரகாம் லிங்கன். தயாரிப்பு – பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கலைச்செல்வி

Related posts

கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

Jai Chandran

எண்ணித்துணிக படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான்- ஜெய்

Jai Chandran

லாக் டவுண் டைரி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend