Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பராரி (பட விமர்சனம்)

படம்: பராரி

நடிப்பு: ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன்

தயாரிப்பு: ஹரி

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: ஸ்ரீதர் ஜி

இயக்கம்: எழில் பெரியவேடி

வழங்குபவர்: ராஜு முருகன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, நாசர்

திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினர் நாங்கள் மேல் ஜாதி, நீங்கள் கீழ் ஜாதி என்ற பிரிவு ஏற்படுத்திக்கொண்டு ஒரே பகுதியில் வசிக்கிறார்கள். அடிக்கடி இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. பிழைப்பு தேடி இரு பிரிவினரும்   பெங்களூரில் ஜூஸ் பேக்டரிக்கு வேலைக்கு செல்கிறார்கள். இரு பிரிவை சேர்ந்த ஹரி,  சங்கீதா ஜோடி காதல் கொள்கிறது. சங்கீதா வலிய வந்து காதலித்தாலும் அதை ஹரி ஏற்க மறுக்கிறார்  பெங்களூரில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெரிய சம்பவம் நடக்கிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு பராரி உருக்கமான பதில் அளிக்கிறது.

வழக்கமாக இரு ஜாதிகளுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக வைத்துதான் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் ஐக்கதை ஒரே வகுப்பைச் சேர்ந்த இரு பிரிவினருக்கான மோதலாக உருவாகி இருக்கிறது.

திருவண்ணாமலை பகுதியில் குடிசை மக்கள் வாழும் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஹீரோ ஹரி குடிசை பகுதி இளைஞராக இருந்தாலும் நாகரிகம் பின்பற்றும் நபராக அவரது பேச்சும் செயலும் அமைந்திருப்பது எதார்த்தமாக கதையை நகர்த்தி செல்கிறது.

எந்நேரத்திலும் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வந்து விடுமோ என்ற பயத்தில் ஹரி,  சங்கீதா சொல்லும் காதலை ஏற்காமல் விலகி  விலகி செல்வதும் சங்கீதா நெருங்கி நெருங்கி செல்வதும் பதட்டத்தை உருவாக்குகிறது.

பெங்களூரில் மாங்காய் ஜூஸ் பேக்ட்டரியில் நடக்கும்  தமிழர்-; கன்னடருக்கு இடையேயான மோதல் நடிக்கத்தை  ஏற்படுத்துகிறது. வில்லனாக நடித்திருக்கும் எழில் கன்னட கன்னட மொழி வெறியராகவே மாறி இருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சனைக்காக இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை மக்கள் பிரச்சனை அல்ல அது கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் சூழ்ச்சி என்பதை பட்டவர்த்தனமாக பேசி இருப்பது ஒரு புதிய போராட்டத்துக்கான முன்னெடுப்பாக இருக்கலாம்..

இயக்குனர் ராஜு முருகன் படங்கள் என்றால் அதில் அரசியல் இருக்கும். அவர் இப்படத்தை வழங்குகிறார்.  அவரது உதவி இயக்குனர் எழில் பெரிய வேடி தாய்க்குப் பிள்ளை சலைத்ததில்லை என்பது போல் அரசியல் அவலத்தை அதிரடியாக தோலுரித்திருக்கிறார்

ஷான் ரோல்டன் இசை, ஸ்ரீதர் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது.

பராரி – தண்ணீர் அரசியல்.

 

.

 

 

 

 

Related posts

MotherSong From Valimai out on 5th Dec

Jai Chandran

சிம்புவின் மாநாடு தீபாவளி ரிலீஸ்

Jai Chandran

கமல் கட்சியிலிருந்து கமீலா நாசர் திடீர் ராஜினாமா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend