Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போர் பதற்றத்திலும் அமெரிக்காவில் ஆஸ்கர் 2026ம் விருது விழா கோலாகலம்..

உலக அளவில் திரைத்துறையில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் 2026 ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை (மார்ச் 16) நடந்தது.

அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய இரு நாடுகள் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு  ஈரான் தனித்து நின்று பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானில் இஸ்ரேல் அமெரிக்கா குண்டுமழை பொழிந்த நிலையில்  இஸ்ரேலிலும் மற்றும் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் அமெரிக்கா அமைத்திருக்கும்   பாதுகாப்பு படைகள்  முகாம்கள் மீது ஈரான் ட்ரோன்கள்  மூலம் தாக்கி  பல்வேறு சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்வேறு உயிர்கள் பலியாகியிக்கும் நிலையில் உலக அளவில் இந்த போரின் தாக்கமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல்,  டீசல் போன்றவற்றுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு  மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா  நடக்குமா? நடக்காதா? என்ற  கேள்விக்குறி இருந்த நிலையில் தற்போது ஆஸ்கர்  விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக  ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்க  பிரமாண்டமாக நடந்திருக்கிறது.

2026ம் ஆண்டுக்கான  ஆஸ்கர் விருது வென்றவர்கள் விவரம் வருமாறு :

சிறந்த நடிகர் மைக்கேல் பி ஜோர் டான் ( படம் சின்னர்ஸ்). சிறந்த நடிகை ஜெஸ்சி பக்லி ( படம் ஆம்னெட் )

சின்னர்ஸ்’ படத்திற்காக, இயக்குநர் ரயான் கூக்ளர் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றார்.

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்ஸஸ் விருதை வென்றது. அதனை ஜோ லெட்டெரி தலைமையிலான குழுவினர் பெற்றனர்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் நடித்த சீன் பென் வென்றார். ‘வெப்பன்ஸ்’ படத்தில் நடித்த ஏமி மேடிகன் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்.

ஃபிராங்கண்ஸ்டைன்’ திரைப்படம் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது.
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ‘கே பாப் டிமன் ஹண்டர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. குறும்படப் பிரிவில் ‘தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்’ விருதை வென்றது.
சிறந்த குறும்படம்’ (Live Action Short) பிரிவில் ‘தி சிங்கர்ஸ்’ மற்றும் ‘டு பீபுள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா’ ஆகிய இரண்டு படங்களுக்கு விருது பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஆஸ்கர் வரலாற்றில் இதுபோல் நிகழ்வது நடப்பது bb7-வது முறையாகும்.

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ஒன் பேட்டல் ஆப்டர் அனதர்
(One Battle After Another) திரைப்படம், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 6 விருதுகளை தட்டிச் சென்றது. ஒரு போர் வீரனின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கூறும் கதையாக இப்படம் உருவாகியிருந்தது.

Related posts

Vishnuvardhan’s Bollywood debut ‘Shershaah’ gets a release date now

Jai Chandran

காமெடி படமாக உருவாகிறது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி

Jai Chandran

Bi-lingual film (Tamil-Telugu) titled “SPARK”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend