Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஒரு தவறு செய்தால் (பட விமர்சனம்)

படம்: ஒரு தவறு செய்தால்

நடிப்பு: எம் எஸ் பாஸ்கர், ராம் சந்திரன், உபாசனா, பாரி, ஸ்ரீதர், நமோ நாராயணன், சுரேந்தர், சந்தோஷ்

தயாரிப்பு: கே எம் பி பிச்சர்ஸ்

இசை: கே எம் ரயான்

ஒளிப்பதிவு: விஜய் கிருஷ்ணா, மகேஷ் ஸ்ரீதர்

இயக்கம்: மணி தாமோதரன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தனி அறையில் நண்பர்களுடன் தங்கி இருக்கும் இளைஞர் வீட்டு வாடகை தர முடியாததால் விரட்டியடிக்கப்படுகிறார். நண்பருடன் தங்க இடம் இல்லாமல் தவிக்கும் அவருக்கு ஒருவர் பணம் சம்பாதிக்கும் யுக்தி பற்றி அறிவுரை கூறுகிறார். அதையே வேதவாக்காக கொண்டு இளைஞர்கள் ஆன்லைனில் ஏமாற்றி பணத்தை சம்பாதிக்க முடிவு செய்கின்றனர். அதற்காக அரசியல் களத்தை அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன அவர்களால் எதிர்பார்த்தபடி கோடிகளில் பணம் சம்பாதிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

இது தனிப்பட்ட ஹீரோ கதை அல்ல வாழ்க்கையில் எப்படி யாவது படத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் சில இளைஞர்களின் கதையாக உருவாகியுள்ளது.

இதில் நடித்திருக்கும் ராம் சந்திரன், பாரி, ஸ்ரீதர் எல்லோருமே தங்கள் பங்களிப்பை சின்சியராக செய்திருப்பதால் காட்சிகள் பரபரப்பாகவும் ரசிக்கும்படியும் உருவாகி இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் உதவுவதாக கூறி நமோ நாராயணனிடம்  பேரம் பேசும் இளைஞர்கள் அவர் சொல்வது போல் எல்லாம் ஆடி எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றி அவதூறாக ஆன்லைனில் கிளப்பி விட்டு எப்படி எல்லாம் தகடுதித்து வேலைகளை நிஜத்தில்  சில அரசியல்வாதிகள் செய்கிறார்கள் என்பதை காட்சிகள் தோலுரித்து காட்டுகின்றன.

தங்களை ஏமாற்ற முயலும் நமோ நாராயணனை தங்கள் வழிக்கு கொண்டுவர எதிர்க்கட்சிக்கு செய்த அதே தில்லு முல்லு வேலையை இவருக்கு செய்து இளைஞர்கள் இவரை வழுக்கி கொண்டு வருவது எதிர்பார்த்த காட்சி அப்படியே கண்முன் நிகழ்கிறது.

நாயகி உபசனா ஆன்லைன் வித்தைகளை கை விரலில் வைத்து நாட்டியமாடுகிறார்.

கே எம் பி பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது

மணி தாமோதரன் ரூம் போட்டு ஆலோசித்து காட்சிகளை ஆன்லைன் மோசடியை வெளிச் சத்திற்கு கொண்டுவரும் வேலையை கனகட்சிதமாக செய்திருக்கிறார்.

ஒரு தவறு செய்தால் – இன்னொரு சதுரங்க விளையாட்டு.

 

 

 

 

 

Related posts

Bun Butter Jam World Premier happened

Jai Chandran

வெப்பன் (பட விமர்சனம்)

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் நாசர் கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend