Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நோக்க நோக்க (பட விமர்சனம்)

படம்: நோக்க நோக்க

நடிப்பு: அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, கஞ்சா கருப்பு, ஜோதிராய் , ஜாகுவார் தங்கம்

தயாரிப்பு: ஆர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ்

இசை:ஆல்ட்ரின்

ஒளிப்பதிவு : விஜய்

இயக்கம்: முத்துக்குமார்

பி ஆர் ஒ: கணேஷ்குமார்

திடீரென்று ஒரு நாள் இரவு இந்திய ரூபாய் செல்லாது என்று மோடி அறிவிக்க நாடே அல்லோ கல்லப்பட்டது. ஏழைகள் பழைய நோட்டை மாற்ற வங்கி யில் காத்து கிடந்தார்கள். இதை மையமாக வைத்து நோக்க நோக்க படத்தின் கதை அமைக் கப்பட்டிருக்கிறது.
பணமதிப்பிழப்பில் ஒருபுறம் ஏழைகள் அவதிப்பட வசதி படைத் தவர்கள் அரசியல் வாதிகள், உச்ச நடிகர்கள் எளிதாக தங்களின் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை செல்வாக்கை பயன் படுத்தி நல்ல நோட்டுக் களாக மாற்றுகின்றனர். அப்படி ஒரு பெண் அரசியல்வாதி பணம் மாற்றும்போது அதை ஒரு பெண் நிருபர் வீடியோவாக பதிவு செய்து தப்ப முயலும் போது அவரை ரவுடிகள் துரத்தி கொலை செய்கின்றனர். அவரது குழந்தை யையும் கொல்கின்றனர். இறந்த குழந்தை ஆவியாக வந்து எப்படி பழி வாங்குகிறது என்பதே கதை.

கதையை வெறும் டாக்குமென்டிரி போல் அல்லாமல் மசாலாக்கள் சேர்த்து திரைக்கதை யாக்கி இயக்கியிருக்கிறார் முத்துகுமார்.

பணமதிப்பிழப்பின்போது நடந்த ஊழலை இப்படியொரு கதையாக உருவாக்கி அதை திரைக்கும் கொண்டு வந்திருப்பது சொல்ல வேண்டிய விஷயம்தான்.

காணாமல்போன செல்போனை கைப்பற்றிய ஹீரோ அர்ஜுன் சுந்தரம் அதிலிருக்கும் ரகசியத்தை வைத்து பெண் அரசியல்வாதி யிடம் பேரம் பேசி பணம் கறந்து காதலியுடன் சந்தோஷமாக இருப்பது ஜிலு ஜிலு.

மோசடியாக பணம் பறித்த ஜோடியை சட்டத்தின்பிடியில் பேய் சிக்க வைப்பது புதுசு. பிறகு தன்னையும் தாயையும் கொன்றவர் களை பழிக்குபழி வாங்குகிறது குட்டிப் பேய்.

ஸ்மார்ட்போனில் நடக்கும் ஆன்லைன் மோசடிகளை அம்பலப் படுத்துவதும், டிக்டாக் கூத்து போன்றவற்றையும் கஞ்சா கருப்பின் காமெடி பகுதியில் சித்தரிப்பது ரசிக்க வைக்கிறது.

உதவி போலீஸ் அதிகாரியாக நடித்தி ருக்கும் பி ஆர் ஒ கணேஷ்குமார் இயல் பாக வந்து செல்கிறார்.

கந்தசஷ்டி கவசத்தை கிண்டல் செய்தவர்களை சாடுவது அரசியல்.

பணமதிப்பிழப்பில் நடக்கும் அவலம் பற்றி பான் இந்தியா படமாக எடுக்கக்கூடிய அளவுக்கு விஷயங்கள் இருக் கிறது. அதை சுருங்க சொல்லும்போது இன்னும் போல்டாக சொல்லியிருந்தால் பேசப்பட்டிருக்கும். முத்துக்குமார் திரைக் கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக் கலாம்.

ஆர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் த்யாரித்திருக்கிறது.

ஆல்ட்ரின் இசை,
விஜய் ஒளிப்பதிவு ஒ கே.

நோக்க நோக்க- நோக்கலாம்.

Related posts

VVSTrailer & SaamanyuduTrailer are trending 1 Million Views

Jai Chandran

“Por” character closely resembles real-life – Sanjana

Jai Chandran

மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend