Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

*நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப் பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத் தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள் ளனர். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத் திற்கு விஷால் சந்திர சேகர் மற்றும் ஸ்ரீசரண் பகாலா ஆகியோர் இணைந்து இசையமைத் திருக்கிறார்கள். இப்படத் திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்தி ருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர் டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி இப்படத் தின் கதையை எழுதி தயாரித்திருக்கிறார். சரண் தேஜ் உப்பலபதி இந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்று கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக விருக்கும் இந்த திரைப் படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளி யாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தமிழ் மொழிக்கான முன்னோட்டம் வெளியிடப் பட்டிருக்கிறது. முன்னோட் டத்தில் பிரம்மாண்டமான காட்சிகளும், அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றி ருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக் கிறது. இந்த படத்தின் தெலுங்கு முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதை மற்றும் ரகசியங் களை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப் படம், ஜூன் 29ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்கு களில் வெளியாகிறது.

Related posts

2 வருடம் பிரேக் எடுத்து படம் இயக்கிய ஜோஜு ஜார்ஜ்

Jai Chandran

கே.வி.ஆனந்த் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுதாபம்..

Jai Chandran

New Avengers: Doomsday Robert Downey Jr AS Super Villain..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend