Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் நிகில், இயக்குநர் கேரி பி.எச். இணையும் “ஸ்பை”

திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி பி.எச். இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் இ டி என்டர்டெயின்மென்ட்(ED entertainment) சார்பில் கே ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர்.

நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன் நடந்து வருவது ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே தோற்றமளிக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.

நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ளார், இந்தப் படம் 2022 ஆண்டு தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை வெளியிடும்போது ” 2022 தசரா பண்டிகையில் திரையரங்குகளை தாக்க வருகிறது ” என்று வெளியிட்டு இதனை படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை இதன் தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார், இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை இயக்குனர் கேரி பி.எச் மேற்கொண்டுள்ளார், மேலும் ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது, அதற்காக படக்குழுவினர் தொழில்நுட்ப குழுவை வலுவாக அமைக்க திட்டமிட்டுள்ளனர், தற்போது இந்த படத்தில் ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா இணைந்துள்ளார், மேலும் சண்டைக் காட்சிகளையும் ஹாலிவுட் ஸ்டண்ட் டீம் கொண்டு உருவாக்குவதாக படக்குழு கூறியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கின்றார். அர்ஜுன் சுரிசெட்டி இந்தப் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிகிறார், மேலும் ரவி அந்தோனி புரொடக்சன் டிசைனராக பணியாற்றுகின்றார்.

படத்தின் புரடக்சன் பணிகளை இடி எமன்டர்டெயின்மென்ட் சார்பில் சிஇஓ சரண் தேஜ் உப்பலபதி மேற்கொள்கிறார், இந்தப் படம் தவிர மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதில் ஒன்று “டி ஜே தில்லு” படம் மூலம் பிரபலமான இயக்குனர் விமல் கிருஷ்ணாவை வைத்து உருவாக்கப் போவதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நிக்கில் சித்தார்த்தா , ஐஷ்வர்யா மேனன், அபினவ் கோமாடம், சன்யா தாகூர், ஜிஸ்சு சென் குப்தா , நிதின் மேத்தா மற்றும் ரவி வர்மா போன்ற மிகப் பெரிய நடிகர் பட்டளாம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

தொழில்நுட்ப குழு

இயக்குனர் மற்றும் எடிட்டர் கேரிபி.எச்.
கதை & தயாரிப்பு கேK. ராஜ சேகர் ரெட்டி
சி இ ஒ. சரண்தேஜ் உப்பலாபதி
வழங்குபவர் இ டி என்டர்டெயின்மென்ட்ஸ்
எழுத்தாளர் அனிருத் கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர ஶ்ரீசரண் பகாலா.
ஒளிப்பதிவு ஜூலியன் அமரு எஸ்ட்ராடா.
கலை இயக்குனர் அர்ஜூன் சூரிஷெட்டி
உடைகள் ராகா ரெட்டி, அகிலா தசரி, சுஜீத் கிருஷ்ணன். தயாரிப்பு வடிவமைப்பாளர் ரவி அந்தோனி மக்கள் தொடர்பு யுவராஜ்

Related posts

மோடி அரசு, தி மு க அரசுக்கு எதிராக விஜய் கட்சி தீர்மானம்

Jai Chandran

Katrina Kaif – Michelle Lee Towel fight scene in Tiger 3

Jai Chandran

பிக்பாஸ் சீசன் 8, அதிரடியில் அசத்தும்  விஜய் சேதுபதி !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend