Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பிளாக் விடோ” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகியுள்ள இப்படம், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, வரும் 2021 ஜூலை 9 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

Black widow சூப்பர்ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff ஒரு உளவாளியாக பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும் தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் எனும் கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக சொல்லியுள்ளது இப்படம்.

மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய வசூலை குவித்து வெற்றி பெற்ற “Avengers End game” படத்திற்கு பிறகு
மார்வல் திரைதொடரில் ( Marvel Cinematic universe) Phase 4 ல் முதல் திரைப்படமாக இப்படம் வெளியாகிறது. Scarlett Johansson முதன்மை பாத்திரத்தில் Natasha/Black Widow, வாக நடித்திருக்கிறார். பிரபல நடிகர் Yelena வாக Florence Pugh நடித்துள்ளார், David Harbour இப்படத்தில் Alexei/The Red Guardian, எனும் பாத்திரத்திலும், நடிகை Rachel Weisz இப்படத்தில் Melina கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இயக்குநர் Cate Shortland இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் Kevin Feige இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Related posts

ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்உருவாக காரணம் என்ன? மாதவன்

Jai Chandran

Jacqueline Fernandez enters the world of  Kichcha Sudeepa-starrer Vikrant Rona  

Jai Chandran

’அரசியலுக்கு வர மாட்டேன் என்னை வற்புறுத்தாதீர்கள்’ ரஜினி திட்ட வட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend