படம்: நெஞ்சுக்கு நீதி
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின் ,எம் எல் ஏ, ஆரி அர்ஜூனா, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ், இளவரசு,
தயாரிப்பு: ஜீ ஸ்டுடியோ, பே வியூபுரஜக்ட்ஸ், ரெமோ பிக்சர்ஸ்
இசை: திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இயக்கம்: அருண் ராஜா காமராஜ்
வெளியீடு: ரெட் ஜெயன்ட்
பி ஆர் ஒ: சதீஷ்(AIM), சுரேஷ் சந்திரா
நகரத்திலிருந்து வெளியூருக்கு மாற்ற லாகி வருகிறார் போலீஸ் உயர் அதிகாரி உதயநிதி. வந்த இடத்தில் சாதிய பாகுபாடு மக்களுக்கிடையே பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மேல்சாதிக்காரர்கள் இழிவுபடுத்துவதுடன் அவர்கள் மீது சாதிய பாகுபாடு பார்க்கும் போலீஸ் அதிகாரி சுரேஷ் பொய் வழக்குகளை போட்டு அவர்களை கெட்டவர்களாக காட்டுகிறார். 30 ரூபாய் சம்பளம் உயர்த்தி கேட்டதற்காக தாழ்ந்த வகுப்பை சேர்ந்த 3 சிறுமிகளை கடத்தும் மந்திரி உறவினர் அவர்களை சீரழிப்பதுடன் அதில் 2 சிறுமிகளை தூக்கிட்டு சாகடிக்கிறார். ஒரு சிறுமி தப்பி ஓடுகிறாள். இந்தக் கொடுமையை போலீஸ் சுரேஷ் மூடி மறைக்கப் பார்ப்பதுடன் மந்திரியின் உறவினரை காப்பாற்ற முயற்சிக்கிறார். இதெல்லாவற்றையும் தெரிந்துன் கொள்ளும் உதயநிதி அதிரடியாக களத்தில் இறங்கி சாகடிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும், பயத்தில் காட்டில் மறைந்திருக்கும் மற்றொரு சிறுமிக்கும் சட்டப்படி எப்படி நீதி பெற்று தருகிறார் என்பதை நுணுக்கமான சட்டப் பிரிவு களின் தெளிவுரையுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
இந்தியில் ஆர்ட்டிக்கில் 15 என்ற பெயரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படமே நெஞ்சுக்கு நீதி பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி டைட்டிலுக்கு மிகவும் பொருத்தமான படம் மட்டுமல்ல கதைக் களமும்தான்.
கதைக்களம் எவ்வளவு பலமானதோ அதேபோல் பலமான நடிப்பின் மூலம் படம் முழுவதையும் உதயநிதி ஸ்டாலின் தன் தோளில் தாங்கி நிற்கிறார். .இதுபோன்ற வெளிப்படையான வசனங்களை பேசி நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சலும் நெஞ்சுருதியும் உதயநிதி பேசும் ஒவ்வொரு வசனத்திலும் விஞ்சி நிற்கிறது.
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் புதிய பரிமாணத்திற்கு உதயநிதி மாறியிருப்பதை உணர்த்து கிறது.

இப்படியொரு கதை கிடைத்தால் மற்ற ஹீரோக்களும் சரி, இயக்குனரும் சரி அதில் கண்டிப்பாக கமர்ஷியல் சாயம் பூசியிருப்பார்கள். ஆனால் சமூகத்துக்கு சட்டத்தின் வலிமையை எப்படி பொறுப் புடன் சொல்ல வேண்டுமோ அப்படி இயக்குனர் அருண் ராஜா காமராஜ், ஹீரோ உதயநிதி சொல்லியிருக் கின்றனர்.
அது, இது என்று தாழ்த்த்ப்பட்ட இனத்த வரை போலீஸ் அதிகாரி சுரேஷ் குறிப்பிடும்போது , விலங்குகளுக்கெல் லாம் பெயர் வைத்து அழைக்கிறீர்கள் மனிதர்களை அது இது என்று எப்படி கூறலாம் ” என உதயநிதி கோபத்தில் சீறும்போது அரங்கில் அப்ளாஸ் பறக்கிறது.
காணாமல்போன சிறுமியை தேடுவ தற்காக பன்றிகள் புரளும் குளத்தில் இறங்கி நடக்கும் உதயநிதி இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார்.
தேசிய மொழி சட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் உதயநிதி முழக்கமிடும்போது ஒரு புதிய சிந்தனையை மனதில் விதைக்கிறார்.
காதலி தான்யா உதயநிதியுடன் போனிலேயே பேசி காதல் செய்வா ரென்று எண்ணினால் அவரும் ஏற்றத் தாழ்வு சமுதயத்தின் முகமூடியை கிழிப்பது வித்தியாசம்.
ஷிவானி ராஜசேகர் காணாமல் போன தங்கையை கண்டு பிடிக்க உதயநிதிக்கு துணை நின்று மாறுபட்ட பாத்திரத்தில் தடம் பதிக்கிறார்.
புரட்சி இளைஞராக வரும் ஆரி அர்ஜூனா துடிப்புடன் நடை போட்டிருக்கிறார்.
4 பாட்டு 4 சண்டை காட்சி, கொஞ்சம் காமெடி என்ற வழக்கமான கமர்ஷியல் படங்கள் எல்லாம் இனி போனியாகாது, நெஞ்சுக்கு நீதி போல் சமுதாய கருத்து பேசும் படங்கள்தான் மக்கள் மத்தியில் பேசப்படும் என்பதை உரக்கச் சொல்லி யிருக்கிறது இப்படத்தின் வெற்றிமுகம்.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எதையும் பூசி மெழுகாமல் தேங்காய் உடைத்ததுபோல் நெத்தியடி காட்சி களாலும், சாட்டையடி வசனங்களாலும் அனல் தெறிக்கவிட்டிருக்கிறார்.
திபு நினன் தாமஸ் இசை காட்சிகளின் ஆழத்தை அடி மனதில் பதியவிடுகிறது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் கேமிரா வசனங்களின் வலியையும், பாத்திரங்களின் உணர்வு களையும் சோரம்போகாமல் பதிவு செய்திருக்கிறது.
நெஞ்சுக்கு நீதி- மனிதர்களுக்கான நியாயத்தை அழுத்தமாக பேசியிருக்கிறது.

