Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மூன்றாம் மனிதன் ( பட விமர்சனம்)

படம்: மூன்றாம் மனிதன்

நடிப்பு: கே.பாக்யராஜ்,
சோனியாஅகர்வால், ஸ்ரீநாத்
ராம்தேவ், பிரணா, ரிஷிகாந்த்
ராஜ், கார்த்திக்ராஜா, சூது கவ்வும் சிவக்குமார், எஸ் ஐ ராஜகோபால்
மதுரைஞானம்

பாடல்கள் இசை – வேணுசங்கர்& தேவ் ஜி

பின்னணி இசை – அம்ரிஷ் . பி

ஒளிப்பதிவு – மணிவண்ணன்

இயக்கம்:ராம்தேவ்

பி ஆர் ஒ: வேலு

ராமர் (ராம் தேவ்)எந்நேரமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறார். அதை மனைவி செல்லம்மா (பிரணா) கண்டிக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சப்.இன்ஸ்பெக்டர் (ரிஷிகாந்த்) செல்லாம்மாவுக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை தன் வலையில்  வீழ்த்துகிறார். மனைவியின் தவறான போக்கை கண்டிக்கும் ராமர் மேலும் குடிகாரனாகிறார் இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்படு கிறார். கொன்றது யார் என்ற மர்மம் நீடிக்கிறது. இந்த கொலை பற்றி புலன் விசாரணை மேற்கொள்கிறார் இன்ஸ்பெக்டர் (கே.பாக்யராஜ்). கொலை செய்தது யார் என்ற சஸ்பென்ஸ் கிளை மாக்சில் உடையும் போது அதிர்ச்சி பிறக்கிறது.

சஸ்பென்ஸ், த்ரில்லர், ஃபேமலி என எல்லாவற்றையும் ஒரே படத்தில் தரமுடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று பதில் அளித்திருக்கிறது மூன்றாம் மனிதன். தொடக்க காட்சியே கால்கள் வெட்டப்பட்டு குப்பை தொட்டியில் இருப்பதாக போலீசுக்கு தகவல் வரும்போது காட்சியில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது.
உடனடியாக போலீஸ் இன்ஸ் பெக்டர் கே.பாக்யராஜ் துப்பறிய கிளம்பி விடுகிறார்.மற்ற போலீஸ் போல் இல்லாமல் பாக்யராஜ் விசாரணை வித்தியாசமாக இருக்குமே என்று கேட்டால் வித்தியாமாகத்தான் இருக்கிறது.
சோனியா அகர்வால், பிரணா, ஶ்ரீநாத், ரவுடி இளைஞர்கள் என எல்லோரிடமும் மிரட்டும் தொணியில் இல்லாமல். சகஜமாக பேசுவது போல் பேசி உண்மையை கண்டறிய முயல்வது பாக்யராஜின் ஸ்டைல் பிறழாமல் பளிச்சிடு கிறது.

பிரணா மீது சந்தேகப்பட்டு பாக்யராஜ் விசாரிக்கும்போது அதன் மூலம் பெரிய ரகசியம் வெளியாகப்போகிறது என்பதை கணிக்கமுடியவில்லை.
சோனியா அகர்வால் தான் தன் கணவரை கொலை செய்திருப்பார் என்று தொடக்கத்திலேயே பலர் யூகிக்கின்றனர் ஆனால் அந்த யூகத்தை இயக்குனர் பொய்யாக்கி இருப்பது கதைக்கு கிடைத்த வெற்றி.

புதுமுகமாக நடித்திருக்கும் பிரணா ஏற்கனவே பல படங்களில் நடித்தது போன்ற அற்புதமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். கதாபாத்திரத்தை அவர் முழுமை யாக உள்வாங்கிக் கொண்டு நடித்ததால்தான் இந்த அளவுக்கு எதார்த்தமாக அவரால் நடிக்க முடிந்திருக்கிறது. நல்லதொரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக வரக் கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது.

ராஜ், கார்த்திக் ராஜா என்ற இரண்டு இளைஞர்களும் தறிகெட்டு திரியும் இளவட்டங் களுக்கு ஒரு படிப்பினை. சப் இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் கதை கருவியாகி இருக்கிறார்.

படத்தின் கதை என்றால் வழி தவறிய மனைவி ஒருவரின் கதை என்று ஒரே வரியில் கூறி விடலாம் ஆனால் அதை இவ்வளவு சூத்திரங்களுக்குள் இயக்குனர் ராம்தேவ் புதைத்து போட்ட முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது காட்சிகள் நீண்டுக் கொண்டே செல்கிறது. பிரணாவின் குடிகார கணவராக ராமர் என்ற பாத்திரத்தில் மனம் உடைந்த கணவனாக இயற்கை யான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ராம் தேவ். மேக்கப்பும் விக்கும்தான் எதார்த்தை கொஞ்சம் செயற்கையாக்குகிறது.

பாடல்கள் இசையை வேணுசங்கர்& தேவ் தேவைக்கு ஏற்ப பின்னணி இசையை அம்ரிஷ் அமைத்துள் ளனர்.

ஒளிப்பதிவாளர் மணிவண்ணன் காட்சி மீதிருந்து கண்களை எடுக்க முடியாதபடி செய்திருக்கிறார்.

மூன்றாம் மனிதன் – இருவர் வாழ்க்கையில் மூன்றாம் மனிதன் தலையிட்டால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லும் எச்சரிக்கை.

Related posts

A ZI Clinic’s Next Initiative – Grand Opening of “Reviv”

Jai Chandran

DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS..

Jai Chandran

பாரதிராஜா, பாக்யராஜுக்கு மணிமண்டபம்…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend