Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நயனுக்கு திடீர் இரட்டை குழந்தை: வாடகை தாய் குழந்தையா? விசாரணை

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த துடன் குழந்தையை கொஞ்சும் படங்களும் வெளியிட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதிதான் மாமல்ல புரத்தில் நயன்தாரா வுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 6 மாதல்தத்தில் இரட்டை குழந்தை பிறந்தாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிப யில் ஆழ்த்தியுள்ளது.

நயன்தாரா திருமணத் துக்கு பிறகு தேனிலவு பயணமாக கணவர் விக்னேஷ் சிவனுடன் சில வெளிநாடுகளுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பிய பிறகு நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். இதற்கிடையில் எந்த நேரத்திலும் நயன் தாரா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கவில்லை. இந்நிகையில் திடீரென்று இருவரும் தங்களுக்கு இரட்ரை குழந்தை பிறந்ததாக அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்ப்டுத் திடது.
இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றி ருக் ல்கலாம் என்று தெரிகிறது.

வாடகை தாய் மூலம் குழந்தைபெறுவது
சட்டப்படி செல்லும் என்றாலும் அதற்கு விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை நயன்தாரா தம்பதிகள் பின்பற்றவில்லை என்று சர்ச்சை எழுந்ததுள்ளது. இதுபற்றி அரசின் கவனத்துக்கு சிலர் எடுத்துச் சென்றனர். இதையடுத்து நயன் தாரா தம்பதிகள் விதிமுறைகளை பின்பற்றினார்களா என்பது பற்றி விசாரிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற விதிமுறைகள் வருமாறு:

*திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

* தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றாவராக இருக்க வேண்டும்.

* தம்பதிக்கும் வாடகைத்தாய்க்கும் தகுதிச்சான்றிதழ் கட்டாயம்.

* ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத் தாயாக இருக்க முடியும்.

* நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்.

* வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். சட்டம் சொல்வது என்ன?

* 2022-ம் ஆண்டு ஜனவரியில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. வாடகை தாயை அமர்த்தும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி.

*கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருத்தல்

* கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது வேறு விதமான நோய் பாதிப்புகள்

* கருத்தரிப்பதால் உயிருக்கு ஆபத்து விளைக்க கூடிய நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே வாடகை தாய் உதவியுடன் குழந்தை பெற முடியும்.

*வாடகை தாயாக நியமிக்கும் பெண்ணின் கர்ப்பப்பையில் அதிக பட்சமாக மூன்று முறை மட்டுமே கருமுட்டை களை செலுத்த வேண்டும்.

*வாடகை தாய் கருவுற்று குழந்தை பெற்றுத்தரும் காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள், கருத்தரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.
உயிரிழப்பு போன்ற வற்றுக்கு இழப்பீடு தர ஒப்புக் கொண்டு சம்பந்தப்பட்ட தம்பதியர் அல்லது பெண், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

* குழந்தை பேறுக்கு பிறகான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வசதியாக, மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான மருத்துவ காப்பீட்டை, வாடகை தாயின் பெயரில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர் எடுத்து தர வேண்டும்.

இவ்வாறு விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது

Related posts

பிரஜன், இவானா வருண் நடிப்பில் ராஞ்சா

Jai Chandran

இயக்குனர் தாமிரா நினைவுகளை பிகிர்ந்த சீனு ராமசாமி

Jai Chandran

14வது ஆண்டில் காலடி வைக்கும் ஸ்ருதிஹாசன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend