பாலிவுட் தவிர கோலிவுட், டோலிவுட் படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்றவர் இசை அமைப்பாளர் பப்பி லஹரி. இந்தியில் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற பல படங்களுக்கும் தமிழில் பாடும் வானம் பாடி, அபூர்வ சகோதரர்கள் ஆகிய படங்களுக்கு ,இசை அமைத்திருக்கிறார்.
கடந்த 2020ம் ஆண்டு, கோவிட்-19 நோயால் பப்பி லஹரி பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டார். இந்நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் இருந்ததால் உடல்நிலை சீராகவில்லை. மூச்சுத்திணறல் காரணமாக இன்று அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி கூறியுள்ளார்.
பப்பி லஹரி மறைவுச் செய்தியை மருத்துவமனை மருத்துவர் உறுதி செய்த நிலையில் பிரதமர் மோடி பப்பி லஹரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமான பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.