Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“என் வானம் நீயே” – பாடலாசிரியராக அறிமுகமாகும் ரவி மோகன்

“என் வானம் நீயே” – பாடலாசிரியராக அறிமுகமாகும் ரவி மோகன்.

“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல்.
இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி.

ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”.

பாடலின் கரு பற்றி,

“என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி.

தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன,
அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.”

இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு,

“அம்மா, இது உனக்காக ♥️”

மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக,
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
திரையில் தனது உணர்வூட்டும் நடிப்புகளால் அறியப்பட்ட அவர், இப்போது சொற்களின் உலகில் தனது தனிப்பட்ட உணர்வுகளால் நிரம்பிய ஒரு புதிய கலைப் பயணத்தை தொடங்குகிறார்.

இசையமைப்பாளர் மற்றும் பாடகி கேனீஷா கூறுகையில்,

“இந்தப் பாடல் என் இதயத்திலிருந்து வந்தது.
‘என் வானம் நீயே’ உருவாக்கும் போது என் தாயை நினைத்துக்கொண்டே இருந்தேன்.
தாய்மார்கள் எப்படியெல்லாம் நம்மை வானம் போல காத்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்தே இந்த பாடலை அமைத்துள்ளோம்.
இது வெறும் ஒரு இசை அல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு உணர்ச்சி.

இந்த மெலடியை கேட்பவர் ஒவ்வொருவரும் தங்களது தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் உணருவார்கள் என்று நம்புகிறேன், என்றார்”.

பாடலாசிரியர் ரவி மோகன் கூறுகையில்,

முதல் முறையாக எழுதுவது என்பது எனது மனத்தின் மிக ஆழமான பகுதியைத் திறந்தது போல இருந்தது.
‘என் வானம் நீயே’ என் தாயிடமிருந்து வந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு.
அன்றாட வாழ்வின் அன்பான, கவனிக்கப்படாத தருணங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகின்றன என்பதைக் குறித்த பாடல்.
அந்த நன்றி, அந்த பாசத்தை மிக நேர்மையான, எளிமையான சொற்களில் வெளிப்படுத்தவேண்டுமென்றே இதை எழுதினேன்.
இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கும் எனது இதயபூர்வமான வணக்கமாக சமர்ப்பிக்கிறேன்.

“என் வானம் நீயே” பாடல் வீடியோ இன்று முதல் அனைத்து முக்கியமான இசை தளங்களிலும் வெளியாகியுள்ளது.
அன்பு, நினைவுகள், மற்றும் மெலடிகளின் கலவையாகிய இந்த பாடல், கேட்பவர் ஒவ்வொருவரையும் உணர்ச்சியால் நிறைந்த ஒரு நெகிழ்ச்சியான பயணத்தில் அழைத்துச் செல்லும், என்றார்.

குழுவின் விவரம்,

இசையமைப்பு, பாடல்: கேனீஷா
பாடல் வரிகள்: ரவி மோகன்
இசை தயாரிப்பு: யாஞ்சன்
தயாரிப்பு: ரவி மோகன் ஸ்டூடியோஸ்
கிரியேட்டிவ் டைரக்டர்: கார்த்திக் யோகி
கிரியேட்டிவ் தயாரிப்பு: பாலச்சந்திரன் ஜி

Related posts

ரஜினி வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர்

Jai Chandran

RATHAM Title look

Jai Chandran

நடிகர் சூரி தடுப்பூசி போட்டுக்கொண்டார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend