‘
‘சக்ரா ‘படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. டிரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.
இதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள்:
வசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.
வசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.
வசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு…
வசனம் 4 : நாயகன் : இது ஏதோ பர்ட்டிக்குலர் ஏரியாவுல, இல்ல பர்ட்டிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.
வசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு
வசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா,மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக் கான், சும்மா விட்ருவானா அவன்?
வசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா?
வசனம் 8: நாயகன்: மிலிடரி …!
வசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்
வசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..
வசனம் 11: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்…
வசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்டிருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்.
வசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க…
வசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் …..
வசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.
WELCOME TO DIGITAL INDIA…என்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால்தான் புரியும் என்கிறார்
இப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன். விஷால் பிலிம் பேக்டரி சக்ரா படத்தை தயாரித்துள்ளது.