Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வரும் 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராகிறார்.. எடப்பாடி பழனிசாமி ராஜினாமா..

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதவி ஏற்கிறார். சென்னை நகர மேயர், தமிழக அமைச்சர், துணை முதல்வர் என பதவி வகித்திருக்கும் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சி தலைவராகவும் பொறுப்பி வகித்திருக்கிறார்.
முதன்முறையாக மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச் சராக வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார் மு.க. ஸ்டாலின். அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருக்கின் றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் பதவிலிருந்த எடப்பாடி பழனிசாமி தேர்தலில் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செலுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கி றது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும்.
10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடிகை ஜமுனா காலமானார்

Jai Chandran

ஹிட் ஆன ‘கணம்’ படத்தின் ஆன்மாவான ‘அம்மா’ பாடல்!

Jai Chandran

புரந்தனா ஃபிலிம்ஸ், முதல் தமிழ் திரைப்படம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend