Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் மகன் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது..

சத்யரஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, மிருணாளினி நடிக்கும் படம் எம் ஜி ஆர் மகன். பொன்ராம் இயக்குகிறார்.  இப்படம் வரும் 23ம் தேதி வெளியாவிருந்த நிலையில் தற்போது தள்ளிவைக்க முடிவு செய்துள்ளனர்,.

இதுபற்றி ஸ்கிரின் சீன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“கணம் ” திரைப்படம் ஒரு டைம் டிராவல் படம்:தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ஸ்ரீதர்

Jai Chandran

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா..

Jai Chandran

விவேக் நினைவு நாள்: மரம் நடும் நிழ்ச்சியில் பூச்சி முருகன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend