Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘நீ போதும்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்

சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணை யான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமா வில் நுழைந்து தங்களுக் கான இடத்தை அடைபவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்தவகையில் தற்போது லஹரி இசை நிறுவனம் சார்பில் ‘நீ போதும்’ என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது.

பெண்களின் தன்னம்பிக் கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் நிரஞ்சனினா அசோகன் நாயகியாக நடித்துள்ளார். வம்சி குருகுரி இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளதுடன் ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதி யுள்ள இந்த பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் ‘நீ போதும்’ ஆல்பத்தை  நடிகை குஷ்பு,, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆன்லைனில் வெளியிட,, இந்த ஆல்பம் வெளியீட்டு விழா  சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் களாக கலந்துகொண்ட நடிகை மீனா, நடிகர்கள், ஷாம், பரத், இயக்குனர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் இந்த ஆல்பத்தை வெளியிட் டனர்.

இயக்குனர் வம்சி குருகுரி பேசும்போது, “எனக்கு தமிழ் மொழி அவ்வளவாக தெரியாததால் தடுமாற்றம் ஏற்பட்டபோது நிரஞ்சனி அசோகன் தான் ஒவ்வொரு வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தந்து உதவினார்.பா

டலாசிரியர் சுரேந்திரன் ஜோ பேசும்போது, “பெண்களுக்கென ஒரு பவர் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகி றேன்..அதை மையக்கருத்தாக வைத்தே இந்த பாடலை எழுதினேன்.

நாயகி நிரஞ்சனி அசோகன் பேசும்போது, “இந்த கான்செப்ட் சொல்லும்போதே இதயத்தை தொட்டது. இந்த மொத்த புராஜெக்ட்டும் எனக்கு ஒரு மேஜிக் போல இருந்தது.

நடிகர் பரத் பேசியது: யாக்கை திரி படத்தில் நடித்ததன் மூலம் நிரஞ்சனி அசோகன் எனக்கு அறிமுகமானார். ரொம்பவே துணிச்சலான பெண்.. இயற்கையான நடிப்பை வெளிபடுத்து பவர்.. தன்னம்பிக்கை கொண்ட பாடல் வரிகளுடன் கூடிய இந்த ஆல்பத்திற்கு அவர் பொருத்தமானவர் தான்.

நடிகை மீனா பேசியது: இந்த பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்சசி.

நடிகர் ஷாம் பேசியது: நல்ல படைப்பு வரணும்னா ஒரு நல்ல டீம் அமையனும். அந்தவகையில் ‘நீ போதும்’ ஆல்பத்திற்கு நல்ல டீம் அமைந்து விட்டது.

இந்த ஆல்பத்திற்கு இரண்டம் பக்கம் உருவாக்கினால் நீ தேவையில்லை என்கிற வார்த்தையையே டைட்டிலாக வையுங்கள்

 

Related posts

வருணன் God of water (பட விமர்சனம்)

Jai Chandran

Nani Joins The Shoot Of Srikanth Odela

Jai Chandran

லவ் மேரேஜ் பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டிய பிரபு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend