Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் (பட விமர்சனம்)

Apபடம்:: மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

நடிப்பு: வரலட்சுமி, ஆரவ், மஹத் ராகவேந்திரா , சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ், சுப்ரமணியம் சிவா, யாஷ் ஷெட்டி, ரவி வெங்கட்ராமன்,ஸ்ருதி நாயக், ஜோ சைமன், பாலாஜி, சந்திரா சூட்

தயாரிப்பு: டி பிக்சர்ஸ் தயாள் பத்மநாபன்

இசை:மணிகாந்த் கத்ரி

ஒளிப்பதிவு: சேகர் சந்திரா

இயக்கம்: தயாள் பத்மநாபன்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா ( D ‘ one)

ரிலீஸ்: ஆஹா ஒ டி டி தமிழ் ஒரிஜினல்

பெண் ஒருவர் கடத்தப்படுவதை பார்க்கும் மஹத் அதை வீடியோ எடுத்துக்கொண்டு அருகிலி ருக்கும் மாருதி நகர் போலீசில் புகார் செய்கிறார். அவருடன் வரும் இன்ஸ்பெக்டர் அந்த கூட்டத்தின் தலைவன் நாகாவுடன் தொடர்பில் இருப்பவர். மஹத்தை அந்த கூட்டம் கொலை செய்கிறது நண்பன் மஹத்தை காணவில்லை என்று தேடும் பெண் போலீஸ் வரலட்சுமி அவரது நண்பர்கள் சந்தோஷ், யாசர், விவேக்கிற்கு மஹத் கொல்லப்பட்ட தகவல் தெரியவர அதற்கு காரணமான நாகா (சுப்ரமணியம் சிவா) மற்றும் இன்ஸ்பெக்டரை கொல்ல முடிவு செய்கின்றனர். அதற்கான திட்டம் தீட்டி காய் நகர்த்தும் நிலையில் இன்சும், நாகாவும் கொல்லப்படு கின்றனர். அவர்களை யார் கொன்றது என்று தெரியாமல் வரலட்சுமியும், நண்பர்களும் குழப்பம் அடைகின்றனர். இந்த கொலையை விசாரிக்க உயர் அதிகாரி ஆரவ் வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

“கொன்றால் பாவம்” படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.

தொடக்கமே பெண் கடத்தல் பரபரப்புடன் காட்சி தொடங்கு கிறது. பெண் கடத்தப்படுவதை மஹத் மறைந்திருந்து வீடியோ எடுத்துவிட்டு போலீசிடம் புகார் தருவதும் அந்த போலீஸ், ரவுடி கூட்டத் தலைவன் சுப்ரமணியம் சிவாவின் நண்பர் என்று தெரிய வந்ததும் மஹத் கதி அதோ கதிதான் என்று தோன்றுகிறது. அவரை கொல்ல ரவுடிகள் துரத்துவதும் சுத்துபோடு வதும் பரபரப்பின் தொடர்ச்சி.

வரலட்சுமி சரத்குமார் பெண் போலீசாக வருகிறார். நான்தான் விஜயசாந்தி என்று எண்ணி அந்தர் பல்டி அடித்து அக்ஷன் காட்டாமல் வேடத்தை மிகவும் நுட்பமாக செய்து கவர்கிறார்.

மஹத் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சோகத்தில் ஆழ்வதும் மஹத்தை கொன்றவர்களை பழிவாங்க ஸ்கெட்ச் போவதும் காட்சியை பரபரப்பாக்குகிறது.

திட்டமிட்டபடி இன்ஸ்பெக்டரை போலீஸ் நிலையத்திலேயே சுட்டுக்கொல்ல காய் நகர்த்தும் நிலையில் அங்கு ரவுடி சிவாவும் வருவது எதிர்பாராத டிவிஸ்ட். என்ன செய்வதென்று தெரியாமல். வரலட்சுமி திகைக்க திடீரென்று மின்சாரம் துண்டிக்கப் பட்டு இன்சும் ரவுடியும். கொல்லப் படுவது அதிர்ச்சி.

இருவரையும் யார் கொன்றது என்று தெரியாமல் வரலட்சுமி திணறுவது போல் ஆடியன்சும் திணறுகின்றனர். இந்தப் புள்ளி முதல் இரண்டு சீனுக்கு ஒரு டிவிஸ்ட் என்று கதை இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது.

கொலையை துப்பறியும் விசாரணை அதிகாரியாக லேட்டாக என்ட்ரி கொடுத்தாலும் தனது கெத்தான தோற்றத்தால் அட போட வைக்கிறார் ஆரவ்.

வரலட்சுமி மற்றும் அவரது நண்பர்கள் மீது சந்தேக பார்வை வீசும் ஆரவ் அவர்களை எப்போது சுற்றி வளைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை இயக்குனர் தயாள் பத்மானாபன் கண்முன் நிறுத்தி  நேரம்போவதே தெரியாமல் காட்சி  களை கிளைமாக்சுக்கு கொண்டு வந்து நிறுத்துவது அவர் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபிக்கிறது.

சந்தோஷ் பிரதாப், யாசர் விவேக் மூவருக்கும் வெறுமனே நிற்கும் வேலைதான். நடித்து ஸ்கோர் செய்ய பெரி தாக வாய்ப்பில்லை. ரவுடி நாகாவாக வரும் சுப்ரமணியம் சிவா கஞ்சி போட்ட அயர்ன் பண்ண சட்டை அணிந்து அதேபோல் விரைப்பாக வருகிறார்.

ஆரவ் பின்னணி கதை பெரும் திருப்பம்
.
காக்கி உடையில் வெறுமனே இப்படியும் அப்படியும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்துவிட்டு செல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் ஆரவ் சம்பந்தப்பட் டவர் என்ற முடிச்சு விழும்போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது.

க்ரைம் படத்துக்கு காமெடி தேவையில்லை என்றாலும் ஆங்காங்கே அந்த நரைத்த தலை ரைட்டர் கடி ஜோக்ஸ் சொல்லி கடுப்பேற்றுகிறார்.

டி பிக்சர்ஸ் தயாள் பத்மநாபன் தயாரித்திரருக்கிறார்.

மணிகாந்த் கத்ரி இசை காட்சி களை ஓவர் டேக் செய்யாமல் அடக்கி வாசித்திருக்கிறது

சேகர் சந்திரா த்ரில் மூடை கெடுக்கவில்லை.

ஆஹா தமிழ் ஒரிஜினல் ஒ டி டியில் இப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் தயாள் பத்மநாபன் ரொம்பவும் குழப்பாமல் சஸ்பென்ஸ் முடிச்சு போட்டிருப்பது தெளிவு.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும்.

Related posts

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால வாழ்த்து

Jai Chandran

“Uttarakaanda” unveils the first look of Shivanna

Jai Chandran

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து விநோதய சித்தம் படத்துக்கு வரவேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend