Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம் படத்தில் மல்லிகா கம்மிங்..

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் ஆசிஷ்வித்யார்த்தி, முக்கிய கதாாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இனியன் ஜே ஹாரீஸ் ஒளிபதிவு செய்கிறார்.  அம்ரிஷ் இசை அமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி,  விவேகா பாடல்கள் எழுதுகிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். ஏ.பழனிவேல் கலை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஸ்டன்ட்  அமைக்கிறார்.  தினேஷ், சிவசங்கர் நடன பயிற்சி அளிக்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பு   செய்கிறார்.  பண்ணை ஏ இளங்கோவ ன் இணை தயாரிப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி வி.சி. வடிவுடையான் இயக்குகிறார்

Related posts

Director GNR Kumaravelan on Arun Vijay’s Sinam

Jai Chandran

GV Prakash Starring ‘Ninja’ shooting starts with a ritual pooja ceremony..

Jai Chandran

“கலகத் தலைவன்” படத்துக்கு கடும் உழைப்பு -அர்ப்பணிப்பு: உதயநிதி பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend