Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாதவன் – ஜோதிகாவுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பு

தமிழ்  திரைப்படங்களுக்கு கடந்த 2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான விருது  சென்னையில்  நாளை(மார்ச் 6ம் தேதி)) நடக்கிறது.

தமிழில் சிறந்த படத்திற்கான முதல் பரிசு, தனி ஒருவன். இரண்டாம் பரிசு பசங்க 2; மூன்றாம் பரிசு பிரபா. சிறப்பு பரிசு இறுதிச்சுற்று ;பெ ண்கள் குறித்து உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கான சிறப்பு பரிசு ஜோதிகா நடித்த , 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகர் மாதவன்;

சிறந்த நடிகை ஜோதிகா;

சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு கவுதம் கார்த்திக்;

சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங்;

சிறந்த வில்லன் நடிகர் அரவிந்த்சாமி;

சிறந்த நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி;

சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி;

சிறந்த குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய்.

சிறந்த குணச்சித்திர நடிகை கவுதமி;

சிறந்த இயக்குனர் சுதா கொங்கரா;

சிறந்த கதையாசிரியர் மோகன்ராஜா;

சிறந்த உரையாடலாசிரியர் சரவணன்;

சிறந்த இசை அமைப்பாளர் ஜிப்ரான்;

சிறந்த பாடலாசிரியர் விவேக்;

சிறந்த பின்னணிப் பாடகர் கானா பாலா;

பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் என, 27 கலைஞர் களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்யிருக்கின்றன.

தமிழக அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவன மாணவர். களுக்கான விருது, ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வானவர்களுக்கு, காசோலை, விருதாளர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை, ராஜா அண்ணாம லைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கி ல், நாளை நடக்கிறது.

 

Related posts

*ஈரோடு-கிழக்கு இடைத்தேர்தல் கமல் பிரசாரம்

Jai Chandran

பெப்ஸி மே தின விழா ரத்து:

Jai Chandran

“டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் பட சூட்டிங் முடிந்தது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend