Trending Cinemas Now
Uncategorized தமிழ் செய்திகள் விமர்சனம்

மால் (படவிமர்சனம்)

படம்: மால்

நடி ப்பு; கஜராஜ், அஷ்ரப், தினேஷ்குமரன்  சாய் கார்த்தி, கவுரி, வினய்

இசை: பத்மயான் சிவானந்தம்

ஒளிப்பதிவு: செல்வராஜ்.ஆர்

இயக்குநர்: தினேஷ்குமரன்.

ரிலீஸ்: ஆஹா ஒ டி டி

பி ஆர் ஓ; : சுரேஷ் சுகு,, தர்மதுரை

100 கோடி மதிப்பிலான பழமை வாய்ந்த தஞ்சாவூர் சோழர் சிலையை ஒரு கூட்டம் கடத்தி விற்க முயற்சிக்கிறது. சிலை கடத்திச் செல்லும் வேலையை சாய் கார்த்தி ஏற்கிறார். அந்த சிலையை அவரிடமிருந்து திருட ஒரு  கூட்டம் திட்டமிடுகிறது. இதற்கிடையில் காதல் ஜோடி ஒன்று வெளியூருக்கு புறப்படு கிறது. அதேசமயம் நண்பர்கள் இருவர் திருட்டு வேலையை இன்ஸ்பெக்டர் வீட்டில் நடத்த முயல்கின்றனர்.  இன்ஸ்பெக்டரோ பேராசைக்காரர் அவரிடம்   கடத்தல் சிலை.கிடைக்க அதை விற்று செட்டிலாக எண்ணுகிறார்.  வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சிலை திடீரென்று காணாமல் இன்ஸ் பெக்டர் பதற்றம் அடைகி றார். கடைசியில் சிலை யார் கைக்கு போகிறது. கடத்தலில் ஈடுபட்ட  சம்பந்தப்பட்டவர்களின் நிலை என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

சமீபத்தில் திரைக்கு வந்த போர்த் தொழில் படமும் சிலை கடத்தல் தொடர்பான கதைதான். மால் படமும் சிலை கடத்தல் கதைத் தான். இருந்தாலும் இரண்டு படங்களுக்கான திரைக்கதை முற்றிலும் மாறியிருப்பதால் மால் சுவாரஸ்யம்.கெடாமல் பாதுகாக் கப்பட்டிருக்கிறது.

நண்பர்களை நம்பி சிலையை ஒப்படைக்கும் சாய் கார்த்தி ஒரு கட்டத்தில் அந்த சிலை காணாமல் போய்விட்டது, நண்பர்களும் விபத்தில் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவதும் காணாமல் போன சிலையை இன்ஸ்பெக்டர் கஜராஜ்தான் மறைத்து வைத்தி ருக்கிறார் என்பதை அறிந்து அவரை மிரட்டுவது காட்சிகளில் சக்கரம் கட்டி விடுகிறது.

சின்னச்சின்ன திருட்டு வேலை செய்யும் அஷ்ரப், தினேஷ் குமரன் ஜோடி லூட்டி கலகலப்பு.  போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் காரில் சோழர் சிலையை கண்டு அதை  ஆட்டய போடும் திட்டமும் சிலையை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிப்பதும் திரைக் கதையை வேறு திசைக்கு திருப்பு கிறது.

சிலை கடத்தல் விவகாரத்தில்  தானாக வந்து சிக்கும் ஜெய், வி ஜே பப்பு காதல் ஜோடி கூடுதல் இணைப்பு.  சீனியர் நடிகர் கஜராஜ் கதையில் முக்கிய திருப்பங்கள் தந்து விறுவிறுப்பை கூட்டியிருக் கிறார்.  திருட சென்ற இடத்தில் வாய் கொழுப்பில்.பேசி இன்ஸ் பெக்டர் கஜராஜை  கலாய்க்கும் தினேஷ் கிளைமாக்சில் சென்டி மென்ட் சீனாகிவிடுகிறார்.

சிவராஜ் ஆர், சாய் கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கிறார் கள்.

இயக்குநர் தினேஷ்குமரன் கதையை சரியான டிஷ்கசனில்  மெருகேற்றி  கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை  சிவராஜ் ஆர்  மேற்கொண்டு துல்லியம் காட்டியிருக்கிறார்.

பத்மயான் சிவானந்தன் இசை கைகொடுக்கிறது.

மால் – கரம்மசால் காம்பினேஷன்.

 

 

 

 

 

 

Related posts

மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் இயற்கை எய்தினார்!

Jai Chandran

வெள்ளி அள்ளிய பிரவீன்குமாரால் பெருமை: கமல் வாழ்த்து

Jai Chandran

முருகக்கடவுளை தவறாக பேசவில்லை: தயாரிப்பாளர் கே.ராஜன் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend