Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லக்கிமேன் (பட விமர்சனம்)

படம்: லக்கிமேன்

நடிப்பு: யோகிபாபு, வீரா, ரெய்ச்சல், அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயகுமார், கவுதம சுந்தர்ராஜன், பரத், ராகுல் தாத்தா, பிரதீப் கே விஜயன் மற்றும் பலர்

தயாரிப்பு: திங்க் ஸ்டுடியோஸ்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்

இயக்கம்: பாலாஜி வேணுகோபால்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா ( D ‘One)

 

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணி புரியும் முருகனுக்கு (யோகிபாபு) சிட்பண்ட் ஒன்றின் மூலம் கார் பரிசு கிடைக்கிறது.அதை விற்று கடன் களை அடைக்குமாறு மனைவி கூறுகிறார். ஆனால் அந்த கார்தான் தனக்கு அதிர்ஷ்டத்தை தரப்போவதாக முருகன் நம்புகிறார். அதற்கேற்ப ஒரு சில நல்ல செய்திகள் வருகிறது. இந்நிலையில் காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததால் ரோட்டில் நிறுத்துகிறார்.இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் தகராறு ஏற்படு கிறது. திடீரென்று முருகனின் கார் திருட்டு போகிறது. அதை இன்ஸ் பெக்டர்தான் திருடி இருப்பார் என முருகன் சந்தேகப்படுகிறார். அதே சமயம் அவரிடமே கார் திருட்டு புகாரும் தருகிறார். மேலும் அவர் செல்லமாக வளர்க்கும். நாய் ஒன்றையும்.திருடி வருகிறார். முருகனுக்கு கார் திரும்ப கிடைத்ததா? இல்லையா? என்பதற்கு படம் பதில் சொல் கிறது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் அவரது எதார்த்தமான பேச்சு, நடிப்பு பாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது

கார் பரிசு கிடைத்தாலும் அதை பார்க்கிங் செய்ய இடமில்லாமல் தெருவில் வெவ்வேறு இடங்களில் நிறுத்துவதும் ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரா வந்து காரை அப்புறப்படுத்த முயலும் போது அவருடன் யோகிபாபு சண்டை போடுவதும் விலங்கத்தின் ஆரம்பம். அடுத்தடுத்து அவர்களுக்குள் நடக்கும் மோதல்சடுகுடு கதையை விறுவிறுப்பாக நகரத்துகிறது.

வீரா வளர்க்கும் செல்ல நாயை யோகிபாபு கடத்தி வந்து நண்பன் அப்துல் வீட்டில் வைப்பதும் அந்த நாயின் கழுத்தில் ஜிபிஎஸ் இருப்பதாக கூறி வீரா நாயை கண்டுபிடிக்க புறப்படுவதும் கூடவே யோகியும் செல்வது விறுவிறு.

கண்டிப்பான நேர்மையான போலீசாக வீரா விரைப்புடன் நடித்திருக்கிறார். யோகிபாபு மனைவியாக வரும் ரெய்ச்சல் குடும்ப சூழலை உணர்த்த யோகியுடன் மல்லு காட்டும்போது சராசரி குடும்ப பெண்ணாக மாறி இருக்கிறார். யோகியின் மகனாக வரும் சாத்விக் ஜூனியர் யோகி பாபுவாக மாறி உள்ளார். படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங் களும் கதையின் சுவாரஸ்யத் துக்கு கைகொடுக்கின்றனர்

லக்கிமேன் படத்தை சினிமாத் தனம் இல்லாமல் வாழ்வின் நிஜ சம்பவங்களாக மாற்றி பாலாஜி வேணுகோபால் இயக்கி இருப்பது ஒவ்வொருவரின் வாழ்வையும் படத்தை ஏதாவது ஒரு காட்சியி லாவது இணைத்துக் கொள்ளச் செய்கிறது. நம்பிக்கை தரும் வசனங்களும் பலம்

சந்தீப் கே விஜயன் ஒளிப்பதிவு ஜிம்மிக்ஸ் காட்டாமல் மனதோடு உறவாட வைக்கிறது.

ஷான் ரோல்டன் இசை படத்துக்கு பிளஸ்

லக்கிமேன் –  பார்க்க தகுந்த எளிமையான படம்.

 

Related posts

விக்ரமின் “தங்கலான்” ரூ.100 கோடி வசூலை நோக்கி பயணம்..

Jai Chandran

துல்கர் சல்மானின் லோகா சேப்டர் 1 வெற்றி விழா

Jai Chandran

இயக்குனர் தங்கர் பச்சான் விளக்க அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend