Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லவ் டு டே (பட விமர்சனம்)

படம்: லவ் டு டே

நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகி பாபு, இவானா,
ராதிகா சரத்குமார், ரவீனா , ஃபைனலி பாரத, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ்
அக்ஷயா உதயகுமார்,
பிராத்தனா நாதன்

தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட்
கல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்

இச:  யுவன் சங்கராஜா

ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்: பிரதீப் ரங்கநாதன்

பி. ஆர் ஒ: நிகில் முருகன்

உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்), வேணு சாஸ்த்ரி ( சத்ய ராஜ்).மகள் நிகிதாவும் (இவானா) காதலிக்கின்றனர். வீட்டில் விஷயம் தெரிந்ததும் பிரதீப்பை வீட்டுக்கு வரச்சொல் கிறார் வேணு சாஸ்த்ரி. சில கேள்விகள் கேட்டுவிட்டு இருவரின் மொபைல் போனையும் வாங்கி பிரதீப் போனை நிகிதாவிடமும் நிகிதா போனை பிரதீபிடமும் தருகிறார். ஒவ்வொருவரின் ரகசியமும் அவரவர் செல்போனில் இருக்கிறது. நிக்கியின் பழைய காதலன், பிரதீப்பின் பழைய காதலிகள் அவரவர் செய்த சேட்டைகள் ஒவ்வொன்றாக இருவருக்கும் தெரிய வருகிறது. லேசாக தொடங்கும் இவர்கள் சண்டை நாளுக்கு நாள் முற்று கிறது. ரகசியங்கள் அம்பலமான நிலையில் இருவரும் காதல் பிரேக் அப் செய்யும் நிலை உருவாகிறது. இந்நிலையில் ஒவ்வொரு செல்போனுக்கும் நிகிதாவின் ஆபாச வீடியோ வருகிறது. இதனால் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. நிகிதா வீட்டிலிருந்து வெளியேறுகிறார். இதன் முடிவு என்ன? நிகிதா கதி என்ன வானது, பிரதீப் எடுத்த முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

இன்றைய காதலின் நிலை என்ன என்பதை தெள்ளத்தெளிவாக லவ் டுடே மூலம் பட்டவர்த்தனமாக கூறியிருக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம் அவரே ஹீரோ வாகவும் நடித்திருக்கிறார். அப்படியே தனுஷ் நடிப்பை உரித்து வைத்திருப்பதுடன் அவரைப் போன்றே உடல் மொழியையும் பிரதிபலித்திருக்கிறார். இது அவருக்கு பிளஸ்ஸா மைனஸா என்று பார்த்தால் முதல் படத்தில் கைகொடுத்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவர் நிச்சயம் தனது நடிப்பு பாணியை மாற்றிக் கொண்டு தனித்துவத்தை காட்டினால்தான் தனக்கென தனி இடத்தை தக்க வைக்க முடியும்.

மகள் இவனாவை காதலிக்கும் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு வரவழைக்கும் சத்யராஜ் அவரிடம் கேள்வி கேட்பதும் தனது பாணி யில் நக்கலடிப்ப்தும் கலகலப்பு. பின்னர் இருவரது செல்போனை யும் வாங்கி கைமாற்றி கொடுக்கும் போது இதிலென்ன இருக்கிறது என்று லேசாக தோன்றினாலும் கிளைமாக்ஸ் வரை அதுதான் பல திருப்பங்களுக்கு காரணமாக அமைகிறது. படத்தை கலகலப்புட னும், சென்டிமென்ட்டுடனும் பதற்றம் விறுவிறுப்பு போன்ற அம்சங்களுடனும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்த்துவது செல்போன் ரகசியங்கள் அம்பலப்படுவதுதான்.

எக்ஸ் பாய்பிரண்டுடன் பாண்டிச் சேரி வரை இவானா ஊர்சுற்றி யதும் இருவரும் வாட்ஸப்பில் செய்த காதல் சாட்களும் அதை யறிந்து பிரதீப் இவானாவிடம் சீறுவதுமாக அரங்கே அமர்க்களப் படுகிறது. அதேபோல் பிரதிப்பின் பழைய காதல் லீலைகள் நண்பர் களுடன் சேர்ந்து பெண்களை கலாய்த்து தள்ளிய சம்பவங்களும் அம்பலமாகி இவானா முன்னால் ச்சீபட்டு பிரதீப் நிற்பதும் தீபாவளி கழித்து வெடிக்கும் சரவெடிகள்.

கூடவிருக்கும் நண்பர் களே தன் காதலிக்கு நூல் விட்டிருக்கி  றார்கள் என்று சந்தேகப்பட்டு அவர்களை பிரதீப் விரட்டும்போது அரங்கில் ஒரு அமைதி பரவுகிறது.

இவானாவின் நடிப்பும் கொஞ்சமும் சளைத்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வேடத்தில் ஒன்றிபோயி ருக்கிறார். தன் மீது சந்தேகப்பட்டு திட்டும் பிரதீப்பிடம் “யார்டா அந்த சரண்யா” என்று கேட்டு அவரை வாயடைக்க வைக்கும் போது சபாஷ் சரியான போட்டி என எண்ண வைக்கிறார்.

இளம் ஜோடிகள் இப்படி நடிப்பை கொட்டிக் கொண்டிருக்க சீனியர் நடிகர்கள் சத்யராஜ், ராதிகா இன்னொரு பக்கம் பொளந்து கட்டு கிறார்கள்.

இதுபோதாதென்று யோகிபாபு பல் மருத்துவராக வந்து தன் பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு செல்கிறார். படத்தில் வரும் எந்த பாத்திரமும் வேஸ்ட் என்று சொல்ல முடியாத ளவுக்கு ஸ்கிரிப் பாக அமைக்கப் பட்டிருக்கிறது ஸ்கிரிப்ட்.

இந்த கால காதலர்கள் மட்டுமல்ல இளவட்டங்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் லவ் டுடே. இதன் மூலம் பல பிரேக் அப்கள் கைவிடப்பட்டு மீண்டும் கைகூட வாய்ப்பிருக் கிறது.

ஏஜிஎஸ் எண்டெர் டைன்மென்ட்
கல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ் இணைந்து தயாரித்தி ருக்கின்றனர்.

படத்துக்கு மற்றொரு பிளஸ் யுவன் சங்கர்ராஜா இசை.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் எந்த சீனிலும் கவன சிதறலை ஏற்படுத்தாமல் காட்சிகளை கண்களுக்குள் பதிய வைத்திருக்கிறார்.

இளம் வயதிலேயே இப்படியொரு காதலை யோசித்து அதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து அலசியிருக்கும் பிரதீப் ரங்க நாதன் கோலிவுட் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

லவ் டுடே – இன்றைய காதலின் தோலுரிப்பு – தீர்வு.

 

Related posts

மின்னலைவிட வேகமான உதவி: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா பாராட்டு

Jai Chandran

சிரஞ்சீவி நடிக்கும்.மெகா பேண்டசி படம் விஸ்வம்பரா

Jai Chandran

Prabhas, Rana Daggubati Landed In The USA For Project K

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend