Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்67 படம் இயக்கும் லோகேஷ் கனகராஜ்

*தளபதி 67 படத்தின் மூலம் 3வது முறையாக விஜய்யுடன் கை கோர்க்கும் செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோ.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  நிறுவனம் தங்களது  பெ ருமைமிக்க புதிய படைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுவதில் உற்சாகம்  அடைகிறது. பிளாக் பஸ்டர் வெற்றி படங்கள் மாஸ்டர்  மற்றும் வாரிசு ஆகிய
படங்களை தொடர்ந்து. தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவதில் நாங்கள்
மிகுந்த  மகிழ்ச்சி அடைகிறோம்
தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை‘ மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கு  கிறார். எஸ்.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக
ஜெகதீஷ் பழனிசாமி இணைத் துள்ளார். இந்த படத்தின் படப்  பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.
மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய  வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் லோககஷ் கனகராஜ் இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என அதிர வைக்கும் ஆல்பங்கள் கொடுத்த ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67
படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்திற்கு  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட்  காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் கவனிக்கின்றனர். படத்தொகுப்பு  பிலோமின் ராஜும், கலையை என் சதீஷ்குமார் கவனிக்கிறார். , நடனத்தை தினேஷ் மாஸ்டர் அமைக்கிறார்.

இந்த படத்தின்  வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார், பாலசுப்பிரமணியன் பொறுற்றுள்ளார்.
படத்தில் நடிக்கும் மற்ற  நட்சத்திரங்கள்,  தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Related posts

AzhagiyadaNanba lyric video from Jasper will be out on Dec 29th.

Jai Chandran

வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது

Jai Chandran

மும்மூர்த்திகள் வெளியிட்ட மூன்றாம் மனிதன்  ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend