Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லியோ ( பட விமர்சனம்)

படம்: லியோ

நடிப்பு: விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, பேபி இயல், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், மடோனா செபாஸ்டியன், ஜாபர் சாதிக்

தயாரிப்பு: எஸ். லலித் குமார்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹன்சா

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமத்

 

இமாச்சல்  அருகே  தியோக் பகுதியில்  பார்த்திபன் ( விஜய்) காபி ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவர் , மனைவி ( திரிஷா) மற்றும் மகன், மகளுடன்  அமைதியான வாழ்க்கை நடத்து கிறார். ஒரு சமயம் அவரது கடைக்குள் புகும் மிஷ்கினின் ரவுடி கூட்டம் அராஜகம்  செய்ய அவர் களை தாக்குகிறார் பார்த்திபன். கோபம் அடைந்த ரவுடி பார்த்தி பனின் மகளை கொல்ல முயல அடுத்த நொடி அவர்களை சுட்டு வீழ்த்துகிறார் பார்த்திபன். இந்த தகவல் பத்திரிகையில் வர அதைப் பார்க்கும் போதை மருந்து கடத்தல் தலைவன் ஆண்டனி தாஸ் ( சஞ்சய் தத்) பார்த்திபனை தேடி இமாச்சல் வருகிறான். காபி ஷாப் சென்று பார்த்திபனை பார்த்து ” நீ லியோ தானே” என்று கேட்கிறான். “நான் லியோ இல்லை” என்று சொன்ன பிறகும் சஞ்சய் தத் கூட்டம் பார்த்திபனை விடாமல் துரத்துகிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதை பயங்கர மோத லுடன் கிளைமாக்ஸ் சொல்கிறது.

விஜய்க்கு ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். என்ட்ரியே வெறிபிடித்து மக்களை துரத்தி கடித்துக்கொல்லும்  ஓநாயுடன் மோதி அதை பிடிக்கும் காட்சியில் அரங்கு ஜில்லிடுகிறது.

காபி ஷாப்பில் புகுந்து.கலாட்டா செய்யும் மிஷ்கின், சாண்டி கோஷ்டியை துப்பாக்கியில் சுட்டடுத் தள்ளி அரங்கை சைலன்ட்டில்  ஆழ்த்தும் விஜய் இவருக்கு பின்னால் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது என்பதற்கான லீட் தரப்படுகிறது.

எதிர்பார்த்ததுபோலவே போதை மருந்து கடத்தல் தலைவன் சஞ்சய் தத் தனது அடியாட்களுடன் விஜய்யை தேடி வந்ததும் பெரிய மோதல் வெடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு புஷ்ஷாகி விடுகிறது.  கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ஆக்ஷன் அதிரடி அனல் பறக்கிறது.

சில ஆக்ஷன் சீன்கள் ஜெயிலர், சீனை ஞாபகப்படுத்துகிறது குறிப்பாக விஜய்யை அர்ஜுன் மிரட்டி கொண்டிருக்கும் காட்சியில் விஜய்யின்  மனைவி த்ரிஷா மற்றும்  குழந்தையை கொல்ல ரவுடிகள் வீட்டுக்குள் செல்லும் போது அங்கு மறைத்து வைக்கப் பட்ட ஆயுத தாக்குதலும்,  கவுதம் மேனன் தூரத்திலிருந்து சுட்டுத் தள்ளுவதும் ஜெயிலர் ரஜினி வீட்டுக்குள் நுழையும் ரவுடிகளை வெளியிலிருந்து ரஜினியின் ஆட்கள்  மறைந்து தாக்கும்  காட்சி போலவே உள்ளது.

சஞ்சய் தத் மிருகங்களை பலி கொடுப்பது, நர பலி கொடுப்ப தெலாம்  நம்ப முடியாத காட்சிகள். ஒரு கட்டத்தில் மகளையே நர பலி கொடுக்க துணிவது என்ன கான்செப்ட் என்று தெரியவில்லை.

அர்ஜுன், விஜய் மோதல் காட்சி ஹை லைட். இதிலும் சீனியர் என்ற முறையில் அர்ஜு னுக்காக  ஆக்ஷன் காட்சியில் காம்ப்ரமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. அர்ஜுனிடம் விஜய்தான் நிறைய அடி வாங்குகிறார்.

த்ரிஷாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.

தான் லியோ இல்லை பார்த்திபன் தான்  என்று விஜய் கதறி அழும் போது அவரது கோபத்தை அடக்க பச்சக்கென லிப் டு லிப் கிஸ் கொடுத்து சர்ப்ரைஸ் தருகிறார் த்ரிஷா.

விஜய்க்கு  நோ பஞ்ச் டயலாக் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம். “நா ரெடிதான் வரவா” பாடல் ஆட்டம் போட வைக்கிறது ஆனால் அந்த பாடலை போதை மருந்து  பேக்டரியில் வைக்காமல் வேறு இடத்தில் வைத்திருந்தால் இன்னும் பெரிதாக எடுபட்டி ருக்கும்.

லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

அனிருத் இசை ஓய்வில்லாமல் ஒலிக்கிறது.

இமாச்சல பகுதிகளை கண்கள் குளிரும்படி காட்சிப்படுத்தியிருக் கிறார் ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமாஹன்சா.

லோகேஷ் கனகராஜ் போதை மருந்து கான்சப்ட்டை விடமாட்டார் போலிருக்கிறது. லேசான கதை தான் என்றாலும்  அதிரடியான பிரமாண்டம் படத்துக்கு கைகொடுக்கிறது. லியோ  செகண்ட் பார்ட்டுக்கும் கிளைமாக்சில் லீட் கொடுக்கிறார் லோகேஷ்.  ஆனால் எப்போது? ஏற்கனவே விக்ரம் 3ம்.பாகம் பெண்டிங்.. சூப்பர் ஸ்டார் படம் வெயிட்டிங்..

ரஜினி ரசிகர்களை கூல் செய்யும் வகையில் “நான் பொல்லாதவன்” பாடல் பின்னணியில் விஜய்யின் சைலன்ட்டுக்கு  பில்டப் தருவது  நல்ல யுக்தி.

லியோ – ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்.

 

 

 

Related posts

துருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை..

Jai Chandran

கடைசி காதல் கதை: டிரஸ் போடலாமா , வேணாமா?

Jai Chandran

Motta Rajendran as Doctor in Dikkiloona

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend