Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்வதி அம்மாளுக்கு வீடு: ராகவா லாரன்ஸ் உறுதி

நடிகர் ராகவா லாரன்ஸ் கூறி உள்ளதாவது:

செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.


28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா, .ஜோதிகா இயக்குநர் த.செ. ஞானவேல் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

Related posts

Dir Ashwath, Dir Pradeep got their second job done

Jai Chandran

பிரபாஸ் புதிய படம் தி ராஜா சாப்

Jai Chandran

வலிமை 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்கள் கடந்து சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend