Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

L 2 எம்புரான் (பட விமர்சனம்)

படம் : L 2 எம்புரான்

நடிப்பு: மோகன்லால், பிரணவ் மோகன்லால், ப்ரித்விராஜ், மஞ்சு வாரியர், பாசில், சிராஜ்

தயாரிப்பு: ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன், லைகா சுபாஸ்கரன்

இசை: தீபக் தேவ்

ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்

இயக்கம்: ப்ரித்திவிராஜ் சுகுமாரன்

பி ஆர் ஓ: சதீஷ் (AIM) for Tamil

கேரளா அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் படம் L2 எம்புரான்.

தந்தை மறைவுக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்கிறார் டோமினோ தாமஸ். திடீரென்று கட்சியை கலைத்துவிட்டு புதிய கட்சியை தொடங்கி நாட்டில் அராஜக பேர்விழியாக சுற்றி திரியும் அபிமன்யு சிங்குடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க திட்டமிடுகிறார். இதற்கிடையில் தந்தை ஆரம்பித்த கட்சி அழியும் நிலைக்கு செல்லும்போது டோவினோவின் உடன் பிறந்த அக்கா மஞ்சு வாரியர் கட்சிக்கு தலைமை ஏற்று கட்சியை புதிய பொலிவுடன் மாற்றுகிறார். இது பிடிக்காத டோவினோ
தாமஸ் மஞ்சுவாரியரை தீர்த்துக்கட்ட ரவுடிகளை ஏவுகிறார். ஏற்கனவே அரசியல் துரோகத்தை சந்தித்த மோகன்லால் எங்கிருந்தோ கிளம்பி வந்து மஞ்சுவாரியரின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவாக போராடி எதிரிகளை துவசம் செய்கிறார். மோகன்லாலுடன் அவரது தளபதியாக பிரித்திவிராஜ் வருகிறார். அவருக்கும் ஒரு பழிவாங்கும் லட்சியம் இருக்கிறது. எல்லோருடைய இலட்சியமும் ஈடேற எவ்வளவு போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை பிரமாண்டமாக விளக்கி இருக்கிறது L 2 எம்புரான்.

ஏற்கனவே பிரித்தி விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படம் திரைக்கு வந்தது. அப்படத்தின் இரண்டாம் பாகமாக L2 எம்பிரான் தற்போது திரைக்கு வந்துதிருக் கிறது.

குரேஷி ஆபிரகாம், ஸ்டீபன் நெடும்பள்ளி, எம்புரான் போன்ற பல்வேறு பெயர்களுடன் கனமான கதாபாத்திரத்தில் களம் இறங்கி இருக்கிறார் மோகன்லால். கதாபாத்திரத்தின் கனமும், அவரது கனமும் படத்தை கனமாக்கி இருக்கிறது.
எப்போது மோகன்லால் வருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சரியான நேரத்தில் நச்சென என்ட்ரீ கொடுக்க வைத்து அவரது கதாபாதிரத்திற்கு இயக்குனர் பிரித்திவிராஜ் பில்டப் கொடுத்திருப்பது அரங்கை அதிர விடுகிறது.

பெரும்பாலான காட்சி களில் மோகன்லால் நடந்து வருவது ஸ்லோமோஷனிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் வேகத்தை குறைத்தாலும் மோகன் லாலின் கதாபாத் திரத்தை கம்பீரமாக காட்ட ஸ்லோ மோஷன் யுக்தி பயன்பட்டி ருக்கிறது.
கடைசி வரை இப்படியே மோகன்லால் நடந்துவிட்டு சென்று விடுவாரோ என்ற ஒரு சந்தேகம் எழும் நிலையில் இரண்டு அதிரடி ஆக்சன் சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
கிளைமாக்ஸ்சில் மோகன்லாலும், பிரித்திவிராஜும் இணைந்து வில்லன் அபிமன்யு சிங்கையும் அவரது ரவுடி கேங்கையும் கடுமையாக சண்டையிட்டு மூச்சு திணற வைக்கிறார்கள்.

பிரித்விராஜ் சுகுமாரன் மோகன்லாலின் தளபதியாக சரியான நேரத்தில் என்ட்ரீ தருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஆக்சன் அதிரடி காட்டினாலும் தனது குடும்பத்தையே சீரழித்த ஒரு எதிரியை பழி தீர்க்க போகிறோம் என்ற உணர்வை இன்னும் கூட ஆக்ரோஷமாக பிரித்விராஜ் வெளிப்படுத்தி இருக்கலாம்.

மஞ்சு வாரியர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அரசியல்வாதிக்கான தோற்றம் இருந்தாலும் மேடைப்பேச்சியில் ஒரு ஈர்ப்பு இல்லாமல் சாதாரணமாக பேசிவிட்டு செல்வது கதாபாத்திரத்தை எடுபடாமல் செய்கிறது.

கதை என்னமோ கேரளா அரசியல் என்றாலும் பல காட்சிகள் வெளிநாடு களில் படமாக்கப் பட்டுள்ளது ஏனோ தெரியவில்லை. பிரம்மாண்டத்தைக் காட்ட இதை ஒரு யுக்தியாக பயன்படுத்இருப்பாரா இயக்குனர்.

எண்ணிலடங்காத கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன. சில பாத்திரங்கள் தேவையில்லாமல் வந்து செல்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
நடிகர் பிரித்வி ராஜ் சுகுமாரன், தான் ஒரு நல்ல நடிகன் மட்டுமல்ல ஆக்சன் கதையை இயக்குவதில் வல்லவர் என்பதை நிரூபித்தி ருக்கிறார்.
லூசிபர் முதல்பாக வெற்றி எல்2 எம்புரான் படத்திலும் தொடர வாழ்த்துக்கள் சொல்வோம்.
எல்2 எம்புரான் கதை கேரள அரசியல் என்றாலும் எல்லா மாநில அரசியலும் இப்படித்தான் துரோகம், வன்மம், கூட்டணி, நட்பு என்று இயங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன், லைகா சுபாஸ்கரன் தயாரித்திருக்கின்றனர்

தீபக் தேவ் இசை பான் இந்தியா படத்திற்கான இசையாக ஒலிக்கிறது

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் கூடுதல் பிரம்மாண்டம் தெரிகிறது.

L 2 எம்புரான் – ஆக்சன் பிரியர்களுக்கு..

Related posts

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி தேர்வு!

Jai Chandran

யாஷ் நடிக்கும் “டாக்சிக் – ரிலீஸ் தேதி இதோ..

Jai Chandran

சைமா 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend