மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. வரும்13 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.. தமிழகத்தில் 700 திரை அரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் ‘பீஸ்ட்’ படத்தை குவைத் நாட்டில் வெளியிட அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது .
பீஸ்ட் படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை வெளியிட தடை வித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.