Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குற்றம் புதிது  (பட விமர்சனம்)

படம்!: குற்றம் புதிது

நடிப்பு: புதுமுகம் விஜய் தர்ஷன், சேஷ்விதா கனிமொழி,  மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார்

தயாரிப்பு:  விஜய் தர்ஷன்

இசை: கரண் பி. கிருபா,

ஒளிப்பதிவு: ஜாசன் வில்லியம்ஸ்,

இயக்கம்: நோவா ஆம்ஸ்ட்ராங்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D One), அப்துல் ஏ நாசர்

 

போலீஸ் உதவி  கமிஷனர்  மகள்  திடீரென்று கடத்தப்படுகிறார். அவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்ததும் அதிர்ச்சி அடையும் உதவி கமிஷனர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கொலைகாரனை தேடும் வேலையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக புட் டெலிவரி செய்யும் கதிரேசன் ( விஜய் தர்ஷன்) போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைகிறார். நான்தான் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தேன். இது தவிர மேலும் இரண்டு கொலை செய்திருக்கிறேன் என்று வாக்குமூலம் தருகிறார். ஆனால் அவர் மனநிலை பாதித்தவர்போல்  பேசுகிறார். கோர்ட்டில் அவரை போலீசார் நிறுத்தும்போது அவரது நடவடிக்கை பார்த்து நீதிபதி கொலை வழக்கை தீவிர விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இதற்கிடையில் ஆட்டோ டிரைவர் ஒருவரையும் இந்த கொலை தொடர்பாக போலீஸ் தேடுகிறது. இதன் முடிவு என்ன என்பது எதிர்பாராத திருப்பங்களுடன் அமைகிறது.

வழக்கம்போல் ஒரு கொலை , சஸ்பென்ஸ்  என்றில்லாமல் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங் படத்தை கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாமல் மேலும் மேலும் அதிர்ச்சியை தரும் அளவுக்கு திருப்பங்களை தந்து தரமான சஸ்பென்ஸ் படமாக தந்திருக்கிறார்.

புதுமுக ஹீரோவாக விஜய் தர்ஷன் அறிமுகமாகியிருக்கிறார். முதல்படம்போல் இல்லாமல் தேர்ந்த  நடிகர் போல் நடித்திருக்கிறார்.

நான் தான் கொலை செய்தேன் என்று அவ்வளவு போலீசார் முன்னிலையில் தர்ஷன் வாக்குமூலம் தருவதும் அதேசமயம் மனநிலை பாதித்தவர் போல் பேசுவதும் இவர் ஒரு சைக்கோவாக இருப்பாரோ என்ற  சந்தேகத்தை எழுப்பி கதையின் வேகத்தை அதிகரிக்கிறது.

ஆட்டுக்கறி வெட்டும் கத்தியால் அந்தப் பெண்ணை நான் துண்டு துண்டாக வெட்டினேன் என்று தர்ஷன்  சொல்வதுடன் அந்த காட்சிகளை காட்டும் போது திகில் எழத்தான் செய்கிறது.

கதாநாயகி சேஷ்விதா கனிமொழி தந்தை மீது பாசம் பொழியும் மகளாக நடித்திருக்கிறார். தொடக்க காட்சியில் நள்ளிரவில் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வருவதாக அவர் சொல்லுபோதே இவரை வைத்துதான் திரைக்கதை சுழலப் போகிறது  என்பதை உணர முடிகிறது.

கதையில் போலீசார் தீவிரமாக துப்பறியும் காட்சிகள் கதையின் ஸ்பீடை அதிகரிக்கிறது.  இதற்கு மேல் இந்த பட கதையை கூறினால் சஸ்பென் ஓபன் ஆகிவிடும். ஒரு சில விஷயங்களை யோசிக்க முடிந்தாலும் கிளைமாக்ஸ்  இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாது

வில்லன் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கும் மது சூதனராவ் இதில் அன்பான தந்தையாக நடித்திருப்பது மாறுபட்ட சூழலை படத்துக்கு தந்திருக்கிறது.

தர்ஷன் விஜய் ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

கரண் பி. கிருபா பின்னணி இசை விறுவிறு…

ஆளை வெட்டும்  காட்சிகளை கேமராமேன் ஜாசன் வில்லியம்ஸ் மறைத்து மறைத்து எடுத்திருந்தாலும் பயமுறுத்தத்தான் செய்கிறது.

எஸ் கமலக்கண்ணன் எடிட்டிங் காட்சிகளை க்ரிப் குறையாமல் வைத்திருக்கிறது..

குற்றம் புதிது – ரசிக்க தகுந்த சஸ்பென்ஸ் திரில்லர்.

Review  By

Jayachandhiran K.

www. Trendingcinemasnow.com

 

 

 

 

 

Related posts

சூர்யா 43′:மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

Jai Chandran

பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்

Jai Chandran

விதிகளை உடைத்த “சபாஷ் மிது” படத்தின் முதல் டீஸர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend