Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கொட்டுக்காளி (பட விமர் சனம்)

படம்; கொட்டுக்காளி

நடிப்பு: சூரி, அன்னா பென் மற்றும் பலர்

தயாரிப்பு: சிவகார்த்திகேயன்

இசை: நேரடி ஒலிப்பதிவு ( இசை அமைப்பாளர் கிடையாது)

ஒளிப்பதிவு: சக்தி

இயக்கம்: பி எஸ் வினோத் ராஜ்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

கிராம பகுதி ஒன்றில்  பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அதை விரட்ட சாமியாரிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி குடும்பத்துடன் ஆட்டோவிலும் டூவீலரிலும் பயணிக்கின்றனர். பல கிலோமீட்டர் செல்லும் பயணத்தில்  பல்வேறு  விவகாரங்கள் அவர்களுக்குள் நடக்கிறது. இறுதியில் பெண்ணுக்கு பேய் ஓட்டினார்களா? அல்லது ரசிகர்களை ஓட்டினார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பல்வேறு சர்வதேச விழாக்களில் விருதுகள் வென்றதுடன் ஆஸ்கர கதைவையும் தட்டித் திரும்பிய கூழாங்கல்   படத்தை இயக்கியவர் பி எஸ் வினோத் ராஜ். இவர் இயக்கியிருக்கும் புதிய படம் கொட்டுக்காளி.

நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த பரோட்டா சூரி விடுதலை படத்திற்கு பின் கதையின் நாயகனாக மாறினார். அதைத்தொடர்ந்து கருடன் என்ற கமர்சியல் படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத் தது.  கொட்டுக்காளியில் தான் ஒரு எதார்த்த நடிகர் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கிறார் சூரி.

கொட்டுக்காளி விருதுக்காக எடுக்கப்பட்ட படம். படத்தின்  சில முக்கிய விஷயங்கள் முக்கியத்துவம் இல்லாத வசனங்களில் சொல்லப்பட்டு அது பலருக்கு புரியாத விதத்தில் மறைந்து விடுகிறது.  இதனால்  கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் சூரிக்கு என்ன முறை என்பது கூட புரியாமல் பலர் கிளைமாக்ஸ் வரை படத்தை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் இருவருக்கமான உறவுமுறை மற்றும் உடன் வருபவர்கள் யார் யார் என்பதையும் கூட  அவ்வப்போது அவர்கள் பேசும் வசனத்தை வைத்து தான் உணர முடிகிறது.

இந்த கதையே ஒரு பெரிய சண்டை நடந்து முடிந்த பிறகு தொடங்குவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது அதை இயக்குனர் ஒரு சில காட்சியிலாவது விளக்கி இருக்கலாம்

விடுதலை,  கருடன் இரண்டு படங்களிலும் சூரி கதை நாயகனாக நடித்திருந்தாலும் அதில் அவருக்கு கமர்சியலாக உதவி புரிய விஜய் சேதுபதி, சசிகுமார் என 2  ஹீரோக்கள் நடித்திருந்தார்கள். கொட்டுக்காளி அப்படி அல்ல..  முழுக்க சூரியே தன்  தோளில் தாங்க வேண்டிய கதையாக இருப்பதால் அந்த கனத்தை அவர் தாங்குவது கடினமாகிவிட்டது

அன்னா பென் மலையாளத்தி லிருந்து தமிழில் நடிக்க வந்திருக்கிறார். படம் தொடங் கியது முதல் கிளைமாக்ஸ் வரை அவருக்கு ஒன்றரை வசனம் மட்டும் தான் தரப்பட்டிருக்கிறது. மற்றபடி வெறுமனே விரக்தியுடன்  அமர்ந்திருக்க வேண்டும்.  இந்த  நடிப்பெல்லாம் எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பது  தெரியவில்லை.

படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் நெருக்கம் வரை ஆட்டோ,  டூ வவீலர் இரண்டிலும் பயணிக்கிறார்கள் தொடக்க காட்சி  முதல்  அந்த இரண்டு வாகனங்களின் சத்தம் மட்டும் தான் இசை.

சூரி குடும்பத்தை வழிமறிக்கும் காளை மாடு காட்சி முடியும்போது லேசான புன்னகை அரங்கில் தவழ்கிறது.

விருது படங்கள் என்றாலே புரியாமல் அல்லது படம் பார்ப்பவர்களே  யூகித்து உணர்ந்து கொள்ள வேண்டிய ஸ்கிரிப்ட் ஆக இருக்க வேண்டும் என்பது போல் ஒரு டிசைன் சினிமா உலகில் உள்ளது அந்த டிசைன் தான் இந்த படத்திற்கும் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் கையாண்டிருக் கிறார். அந்த பார்முலாவை சரியாக பின்பற்றியதால் விருதுகளையும் வென்று குவித்திருக்கிறார் ஆனால் ரசிகர்களை?

கதை புரியவில்லை என்று எண்ணுபவர்களுக்கு ஒரு சிறிய கதை சுருக்கத்தை தர வேண்டி இருக்கிறது. அன்னா பென் கல்லூரியில் படிக்கும்போது  ஒருவரை காதலித்திருக்கிறார். குடும்பத்தினர் சூரியை கட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும்போது மறுத்து விடுகிறார். உடனே அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்ற கதையை குடும்பத்தினர் கட்டி விடுகி றார்கள். இதுதான் கதை சுருக்கம்.

கிளைமாக்சில் ஏதோ நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று படம் முடிந்துவிடு கிறது. இயக்குனர் பெயர் வந்துவிடுகிறது. அதன் பிறகு… அதன் பிறகு என்ன அவ்வளவு தான் படம் முடிந்தது வெளியே போக வேண்டியது தான்.

கொட்டுக்காளி – கொட்டும் தேள்.

 

 

 

Related posts

பொட்டன்ஷியல் நிறுவனத்துடன் மீண்டும் இணையும் ஜீவா

Jai Chandran

Mani Ratnam and A.R. Rahman visit Shamlee’s art show

Jai Chandran

தென் மாவட்ட பின்னணி கதையில் விக்ராந்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend