தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான. கே என் கே புரடக்ஷன்ஸ் (KVN Productions) தங்களது அடுத்த படைப்பான. கே டி தி டெவில் (#KD- The Devil) படத்தின் டைட்டில் டீசரை பெங்க ளூரில் பிரமாண்டமாக வெளியிட்டது!
2022 தென்னிந்தியாவின் வெற்றி கரமான வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக் பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851 கோடிகளைத் தாண்டி அனைவரும் வியக்கும் வண்ணம், கன்னட திரையுலகம் இந்தியா வின் மிகப்பெரிய தொழில் துறையாக மாறி நிற்கிறது !
கன்னட திரையுலகில் கே என் கே புரடக்ஷன்ஸ் தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களின் 4வது திரைப்படம் பெங்களூரில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. முதன்முறை யாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, கே டி தி டெவில் (KD-The Devil”) டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப் @பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப் பட்டது.
பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையு லகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் லெஜண்ட் திரு.சஞ்சய் தத், முன்னணி சாண்டல்வுட் ஸ்டார் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா, இயக்குனர் ‘ஷோமேன்’ பிரேம், தயாரிப்பாளர் கே.வி.என், ‘தலைவர் – பிசினஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்’ சுப்ரித், கன்னட திரைப்பட நடிகை ரக்ஷிதா, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா ஆகியோர் கலந்து கொண்ட இவ்விழாவில். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.
கே டி தி டெவில் டைட்டில் டீசரின் மிகப்பெரும் சிறப்பு என்னவென் றால், கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுப்லகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் இதற்கு குரல் கொடுத் துள்ளனர். தமிழ் பதிப்புகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத் துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புகளுக்கு முறையே சஞ்சய் தத், மோகன்லால் ஆகியோர் குரல் கொடுத்துள் ளனர். கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் தானே குரல் கொடுத்துள்ளார். இந்தியத் திரையுலகில் இதுவரை ஒரு திரைப்படத்தின் டைட்டில் டீசர் செய்யாத சாதனை இது. கன்னடத் திரைப்படத் துறையின் முதல் பான் இந்தியா திரைப்படம் என்பதை குறிக்கும் வகையில், டீசரின் பிரமாண்டம் அமைந்திருக்கிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் இசையுடன், கே டி தி டெவில் பரபரப்பை கூட்டுகிறது!
இவ்விழாவில் இயக்குநர் பிரேம் பேசுகையில், “எங்கே நல்லது இருக்கிறதோ, அங்கே கெட்டதும் இருக்கும். உதாரணத்திற்கு, ராமன் இருந்த போது, ராவணனும் இருந்தான். படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளன. இந்தப்படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. இந்த படம் கேஜிஎஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்றார்.
ஹீரோ துருவா சர்ஜா பேசுகையில், “சஞ்சய் தத் ஒரு லெஜன்ட். கே டி டீசர் பார்வைக்கு ஒரு ஆக்சன் கலந்ததாக இருந் தாலும் குடும்ப பார்வையாளர்க ளை கவரும் வகையில் உள்ளது. கே டி மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது, பார்வையா ளர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்” என்றார்.
நடிகர் சஞ்சய் தத் பேசுகையில்,
“நான் இப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் கே என் கே புரடக்ஷன்ஸுக்கு வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் அதிகமாக வேலை செய்யப் போகிறேன் என்று நினைக்கிறேன், எனவே இந்த வாய்ப்பிற்காக மீண்டும் நன்றி பிரேம் சார் மற்றும் கே என் கே புரடக்ஷன்ஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி. டீசர் பார்த்து கொண்டாடுங்கள்!”
ரக்ஷிதா (நடிகை/இயக்குனர் பிரேமின் மனைவி) பேசுகையில்,
“சஞ்சய் தத் சார் இல்லாமல் இந்த நிகழ்வு முழுமையடைந்திருக்காது அவருக்கு நன்றி. அனில் ததானியின் ஆதரவு மகத்தானது அவருக்கு பெரிய நன்றி. இந்த படம் துருவா சர்ஜாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்” என்றார்.
கே என் கே புரடக்ஷன்ஸ் பிசினஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் தலைவர் சுப்ரித் பேசுகையில், “படத்தில் அழுத்தமான கதை உள்ளது. பிரேம் சார் இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறார். பிரேம் சாருக்கு அவர் செய்யும் ஒவ்வொரு திரைப்படத் திற்கும் ஒரு பெரிய கிரேஸை உருவாக்கும் திறமை உண்டு. இந்தப்படத்திற்கு துருவா சர்ஜாவை விட வேறு ஒரு நடிகர் பொருத்தமாக இருக்க .”
தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் (‘)Red Giant Movies) வழங்க வுள்ளது. கன்னட பதிப்பை கே என் கே புரடக்ஷன்ஸ் வழங்கவுள்ள நிலையில், இந்தி பதிப்பை அனில் ததானி தலைமையிலான ஏ ஏ பிலிம்ஸ (AA Films) வழங்கவுள்ளது. தெலுங்குப் பதிப்பை தெலுங்குத் திரையுலகின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான சாய் கொரபதி தலைமையிலான வராஹி சலனா சித்திரம் ‘(Vaaraahi Chalana Chitram) வழங்கவுள்ளது. மலையாளப் பதிப்பை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான. ஆசிர்வாத் சினிமாஸ் (Aashirvad Cinemas) நிறுவனம் வழங்க வுள்ளது.
கே டி தி டெவில் டைட்டில் டீஸர் படத்தின் விண்டேஜ் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா நடித்துள்ள ‘காளி’ கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை டீஸர் காட்சிப்படுத் தியுள்ளது. டைட்டில் டீசரில் ரத்தம் தெறிக்கும் அதிரடி ஆக்சன் பிரமிக்க வைக்கிறது. டீசர் வெளியானவுடனேயே அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது!