படம்: காத்து வாக்குல ஒரு காதல்
நடிப்பு: மாஸ் ரவி (இரு வேடம்), லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சூப்பராயன், கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர் தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி
தயாரிப்பு: எழில் இனியன்
இசை: ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்
ஒளிப்பதிவு :ராஜதுரை & சுபாஷ் மணியன்
இயக்கம்: மாஸ் ரவி
பிஆர்ஓ: குமரேசன்
ஜீவா (மாஸ் ரவி), மேகா (லட்சுமி பிரியா) உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். அமைதி தவழும் முகத்துடன் இருக்கும் ஜீவா திடீரென்று ரவுடியாக இருப்பதைக் கண்டு மேகா அதிர்ச்சி அடைகிறார். இதற்கிடையில் ஜீவாவை பல்லவி (மஞ்சு) காதலிக்கிறார். இந்த முக்கோண காதலுக்கு இடையே ஒரு ரவுடி ராஜ்ஜியம் குறுக்கே புகுகிறது. இதன் முடிவு எதிர்பாராத கிளைமாக்ஸாக அமைகிறது.
மாஸ் ரவி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் இயக்கியும் இருக்கிறார். இருவே டம் என்பதற்கு வித்தியாசம் காட்டுவதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஜென்டிலாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் அவர் காதலி லட்சுமி பிரியாவுடன் மென்மையான காதல் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்வதும், அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் லட்சுமி பிரியா, “இந்த உலகமே நீ தான் ” என்று தன் காதலை அர்ப்பணிப்பதும் நிஜ காதலின் பிரதிபலிப்பு.
மென்மையான தென்றல் போல் செல்லும் மாஸ் ரவி, லட்சுமி பிரியா காதலுக்குள் திடீரென்று ரவுடி கதை புகுத்துவது திரைக்கதையை திசை திருப்புகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் காட்சி மாறி ரவுடி களத்துக்குமாறும் போது ரீலை மாற்றி போட்டு விட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த குழப்பம் கடைசிவரை நீடிக்கிறது கிளைமாக்சில் அதற்கு சொல்லப்பட்டிருக்கும் தீர்வு நம்ப முடியாததாக இருந்தாலும் பொருத்தமான காட்சியாக மனதில் இடம் பிடிக்கிறது.
லட்சுமி பிரியாவும், இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் மஞ்சுவும் உருகி உருகி காதலிப்பது எம்ஜிஆர் காலத்து ஃபார்முலா.
சிரிப்பை வரவழைப்பதற்காக. ஆதித்யா கதிர், தங்கதுரை போராடி இருக்கிறார்கள். கல்லூரி வினோத் அழகான வேடம் ஏற்றிருக்கிறார்.
வில்லன் நடிகர் தீனா கிழிந்த பனியன் போட்டுக் கொண்டு ரவுடித்தனம் செய்வது பயமுறுத்துகிறது.
எழில் இனியன் படத்தை தயாரித்திருக்கிறார்.
ஜிகேவி & மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் ஒ கே.
ராஜதுரை & சுபாஷ் மணியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஒரு சீன் காதல் மறு சின் அடிதடி என்று கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரை ஒரே பாணியில் படத்தை இயக்கி இருக்கும் மாஸ் ரவி கிளைமாக்சில் எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்து மாஸ் காட்டி இருக்கிறார்.
2 வருடத்துக்கு முன்பு விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெளியானது. அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை.
காத்து வாக்குல ஒரு காதல் – மோதலும் காதலும்.
By
Jayachchanthiran. K.
www.trendingcinemasnow.com
