Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாக்கு எண்ணும்‌ நாள்‌ – கட்‌சியினருக்கு கமல்ஹாசன் கடிதம்‌

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து தனது கட்சி தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
உயிரே உறவே தமிழே,
நாளை வெளியாக இருக்கும்‌ தேர்தல்‌ முடிவுகளுக்காக ஆவலோடு காத்‌திருப்பீர்கள்‌.
ஆர்வமிகுதியில்‌ உங்கள்‌ பாதுகாப்பை மறந்து விடக்கூடாது
வாக்கு எண்ணும்‌ மையங் களில்‌ கூட்டம்‌ கூட வேண்டிய தில்லை. அங்கீகரிக்கப்பட்ட
முகவர்களைத்‌ தவிர பிற கட்சி உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஊரடங்கு விதிமுறைகளைப்‌ பின்பற்றி வீடுகளில்‌ பாதுகாப் பாக இருக்க வேண்டும்‌.
தேர்தல்‌ முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும்‌, உங்கள்‌ குடும்பத்தாரின்‌
பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குபதிவு முடிந்த மறுநாள்‌ நான்‌ உங்களுக்கு எழுதிய கடிதத் தின்‌ வரிகளை இங்கே மீண்டும்‌ நினைவூட்ட விரும்புகிறேன்‌.
தேர்தல்‌ என்பது முடிவல்ல மக்கள்‌ பணியில்‌ முடிவென் பது கிடையாது என்பதை நாம்‌
நன்கறிவோம்‌. இந்த தேர்தல்‌ நமக்கு ஒரு புதிய அனுபவம்‌. புதிய தொடக்கம்‌. இந்தத்‌
தேர்தல்‌ பயணத்தில்‌ மக்களுக்கு நம்‌ மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்‌தி ருக்கிறோம்‌.
மக்கள்‌ அன்பே நம்‌ பலம்‌. மக்கள்‌ நலனே எதைக் காட்டிலும்‌ முதன்மையானது.
வெற்றி எனில்‌ கொண்டாடத்‌ தேவை இல்லை. தோல்வி எனில்‌ துவள வேண்டிய தில்லை.
எதுவரினும்‌ மக்கள்‌ பணி களைத்‌ தொடருங்கள்‌. இந்த இக்கட்டான சூழலில்‌
பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும்‌ செய்யுங்கள்‌. ‘நாமே தீர்வு”
நல்ல முறையில்‌ செயல் பட்டுக்‌ கொண்டிருப்பதை அன்றாடம்‌ வரும்‌ அறிக்கைகள்‌ மூலம்‌ அறிகி றேன்‌. உங்களை நினைத்து பெருமிதம்‌ கொள்கிறேன்‌. மக்களுக்காக, மக்களுடன்‌ களத்தில்‌ நிற்போம்‌.
நாளை நமதே!
உங்கள்‌ நான்!
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Related posts

யுவன் தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

Jai Chandran

சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் அமீர்

Jai Chandran

தி லிப் பாம் நிறுவனம் முதல் பிறந்தநாளில் நயன்தாரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend