Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாளை முதல் கமல் ஹாசன் சுற்றுப்பயணம்

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்திலி ருந்து உள்ளாட்சி உரிமைக்குரல் தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவங்குகிறார்.

வணக்கம்,
வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப் படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று.
இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டிற்காக கருத் தியல் ரீதியிலும், களத் திலும் மய்யம் தொடர்ந்து செயல்பட்டுவந்திருக்கிறது. நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி யிடுகிறது என்பதை தலைவர் அவர்கள் ஏற்கனவே அறிவித் துள்ளார். மாற்றத்தின் பிரதிநிதிகளாக, மய்ய வேட்பாளர்கள் தமிழக மெங்கும் போட்டியிடுகி றார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சி களின் உரிமைகளுக்காக உரத்த குரல்கொடுப் பதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்  “உள்ளாட்சி – உரிமைக்குரல்” முதற்கட்ட பரப்புரைப் பயணத்தை, நாளை (27.09.21) காஞ் சிபுரம் மாவட்டம் கோவூரி லிருந்து துவங்குகிறார்.
30.09.21 அன்று செங்கல் பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது

உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும்.

 

Related posts

Here it is AkashVaani teaser

Jai Chandran

டிமான்டி காலனி 2ம் பாகம் ( பட விமர்சனம்)

Jai Chandran

Nani, Vivek Athreya Gets Powerful Title Suryavin Sanikizhamai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend