Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

 

இயக்குநர் பேரரசு பேசியதாவது:

தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் CV குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன்.. நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்தபோதே சில திருத்தங்கள் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில் எடுத்த அந்த படத்திற்கு மிகச்சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப்பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நன்றி.

நடிகர்கள் : விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர்

தொழில் நுட்ப குழு

இயக்குநர் : எஸ் எஸ் முருகராசு
இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா
ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு
எடிட்டர் : எம்.ஜான்சன் நோயல்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான்
நடன அமைப்பாளர்: அபேப் ஆர் கே
இணை இயக்குநர்: ஆர்.ஐய்யனார், ரமேஷ் பாஷா
இணை இயக்குநர்: சரண் கே.ஆறுமுகம்
உதவி இயக்குநர்: ஆறுமுகம், பிரதாப் சிங்
DI: கலர் வேவ்ஸ்
கலரிஸ்ட் : ராகவன்
VFX: Issls ஸ்டுடியோ
உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர்
உதவியாசிரியர்: லோகேஷ்ராஜா, சாம்ராஜா
விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ்
விநியோகம் : ஜி.தனஞ்செயன்
மக்கள் தொடர்பு : கேப்டன் எம் பி.ஆனந்த்

Related posts

think music india 10million now

Jai Chandran

மஞ்சு வாரியர் வெளியிட்ட “சின்ன சின்ன ஆசை” ‘ பட செகண்ட் லுக்

Jai Chandran

75 திரையில் “நல்ல பேரை வாங்க வேண்டும்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend