Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹார்ட்டின் (பட விமர்சனம்)

 படம்: ஹார்ட்டின்

 நடிப்பு: சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர்

தயாரிப்பு: டிரைடன்ட் ஆர்ட்ஸ்  ஆர் ரவீந்திரன்  மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ்

இசை: ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு: முகேஷ்

இயக்கம்:கிஷோர் குமார்

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை ஜெய்ப்பூர் அழகு நகரில் நண்பருடன் ஹோட்டல்  நடத்துகிறார்  சனந்த். அந்த ஹோட்டலுக்கு தோழியுடன் சாப்பிட வருகிறார்  இமயா. அப்போது சனந்த்துக்கும் இமயாவுக்கும் நட்பு மலர்கிறது ஒரு சமயம் இருவரும் தனிமையில் சந்திக்கும்போது இமயா  தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால்  சனந்த் அந்த காதலை ஏற்க மறுக்கிறார். ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வி அடைந்த நிலையில் காதல் மீது சனந்துக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம்   இந்நிலையில் சனந்த்  விபத்தில் சிக்க அவருக்கு சில வருட நினைவுகள் மறந்து விடுகிறது. ஏற்கனவே காதலித்த பெண்ணை காதலிப்பதாக அவர் எண்ணிக் கொண்டு செயல்படுகிறார். சனந்த் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் பழைய காதலி வந்தால் தான் முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் சனந்த் கதி என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

டிவிஸ்ட்  அண்ட் ட்ர்ன்ஸ், சஸ்பென்ஸ் திரில்லர் காமெடி என்றுதான்  சமீப காலமாக கதைகள் வந்து கொண்டிருக்கிறது  90 ஸ்  காலகட்டத்தை ஞாபகப்படுத்தும் காதல் கதை  என்பது மறந்து போய்விட்ட நிலையில் அந்த பாணியில் உருவாகி வந்திருக்கிறது ஹார்ட்டின் திரைப்படம்.

அழகிய ஜெய்ப்பூர்  பகுதியில் அரண்மனை,  மலைகளுக்கு  நடுவில் காதல் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ  சனந்த் சராசரி ஒரு இளைஞன் தோற்றத்தில் இருக்கிறார். தன் ஹோட்டலுக்கு வரும் இமையா உடன் அவர் நட்புடன் பழகும் போது அவர் மீது காதல் கொண்டு சுற்றுவதுபோல்  தோன்றுகிறது. திடீரென்று இமயா தனது காதலை வெளிப்படுத்தும்போது அதை சனந்த் ஏற்க மறுப்பது  அதிர்வை தருகிறது.

சனந்த், மடோனா செபாஸ்டின்  காதல் பிளாஷ் பேக் வரும்போது காட்சிகளில் இளமை துள்ளல் தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மடோனா தலை காட்டி இருக்கிறார்.

சனந்த் மீது காதல் கொள்ளும் மடோனா திடீரென்று காதலை பிரேக் அப் செய்வதில் வலுவான காரணம் இல்லை  படத்தின் இடைவேளைக்கு பிறகு முதல் காதலி இரண்டாம் காதலி என இருவருக்கு நடுவில் போட்டி ஏற்படும் என்று பார்த்தால் அதிலும் கொஞ்சம் ஏமாற்றம்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ்  ஆர்.ரவீந்திரன்  மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து உள்ளனர்.

ராஜேஷ் முருகேசன் இசை, முகேஷ் ஒளிப்பதிவு ஓகே.

இயக்குனர் கிஷோர் குமார்  திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி  மாறுபட்ட கதைக்களமாக மாற்றி இன்னும்  சுவாரஸ்யமாக சொல்லி இருக்கலாம்.

ஹார்ட்டின்  –  காதல் திண்டாட்டம்

Review by

K. Jayachandhiran j

Trending cinemas now.com

 

Related posts

Mustafa Mustafa wholesome entertainer – Sakthivelan B

Jai Chandran

எம் ஜி ஆர் பற்றி அவதூறு பேசுவதா? தெலுங்கு நடிகருக்கு விஷால் கண்டனம்..

Jai Chandran

இக்‌ஷு’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ்வரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend