Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் (Home Movie Makers) சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத் துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்ட மாக வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனை மிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக் கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங் களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்று கிறார்.

சைரன் படத்தின் துவக்கத் திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத் தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன் ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளி யானது. பின் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்தி ரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது. தற்போது வெளியாகியுள்ள டீசர். சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவரு வதைக் காட்டுகிறது.

ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும், போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இந்த டீசர் இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப்படத்தின் மையக்கதையை விவரிக் கிறது. பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியா சமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்ப டுத்துகிறது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமா கிறார்.

மிகப்பிரமாண்ட பொருட் செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற் றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள் ளார். காமெடி மட்டுமல் லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத் தில் யோகிபாபு நடிக்கி றார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிர மாக நடைபெற்று வரு கிறது. விரைவில் படத் தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப் பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S
ஒப்பனை: மாரியப்பன்
ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
வண்ணம்: பிரசாத் சோமசேகர்
DI: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G
தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
புரமோசன் ஹெட் – ஷ்யாம்
மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM)
மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

Related posts

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படமாக்கி நடித்த ஆறு ராஜாவுக்கு நக்கீரன் கோபால், கே.ராஜன், நடிகைகள் வாழ்த்து

Jai Chandran

Sona Heiden’s ‘SMOKE’ web series First Look

Jai Chandran

MaanaaduTrailer in theatres with #doctor From day after

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend