Trending Cinemas Now
செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெயம் ரவி நடிக்கும் பூமி திரைப்படம் ஒடிடியில் ரிலீஸ்

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பூமி. விவசாயிகளின் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். லக்‌ஷ்மன் இயக்கி உள்ளார். இப்படம் வரும் பொங்கல் தினத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது
இதுகுறித்து ஹீரோ ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது நீண்ட திரைப்பயணம்‌ முழுக்க, முழுக்க ரசிகர்க ளாகிய உங்களால்‌ ஆனது.
நீங்கள்‌ அளித்த அளவற்ற அன்பு என்‌ மேல்‌ நீங்கள்‌ வைத்த மிகப்பெரும்‌
நம்பிக்கை, நீங்கள்‌ அளித்த உத்வேகம்‌ தான்‌, சிறப்பான படங்களில்‌ நான்‌ பணியாற்ற காரணம்‌. எனது கடினமான காலங்களில்‌, என்னை உங்களின்‌ சொந்த ரத்தம்‌ போலவேநினைத்து ஆதர வளித்தீர்கள்‌. உங்களின்‌ இந்த ஆதரவே, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள்‌ இல்லாமல்‌, என்னால்‌ இத்தனை தூரம்‌ வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது
குடும்பத்தினராகவே கருதுகி றேன்‌.
“பூமி” திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌. எனது
திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்க மான படம்‌. கோவிட்‌ -19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங் களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களு டன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத் தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக் கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங் களில்‌ திரையரங்கில்‌ வந்து, எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப் பதை, ஆசிர்வாதமாக கருது கிறேன்‌.
பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை
திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்‌
இவ்வாறு ஜெயம் ரவி கூறி உள்ளார்.

Related posts

கொற்றவை – கதை அல்ல வரலாறு:  படக்குழு பரபரப்பு தகவல்

Jai Chandran

புதிய பட வருகையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீகாந்த்

Jai Chandran

விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ் ‘ பட டிரெய்லர் விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend