Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ட்ரோன்ஸ் (பட விமர்சனம் )

படம்: ட்ரோன்ஸ்

நடிப்பு: டிராவிட் செல்வம் ( பரிதாபங்கள் நடிகர் ), சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ்

தயாரிப்பு : ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் ஜி எம் மோர்கன்

இசை:ஹரி எஸ்.ஆர்.

ஒளிப்பதிவு :ஜெயந்த் சேது மாதவன்

இயக்கம்: ஆர். ராகவ் மிர்தாத்

பிஆர்ஓ : சதீஷ் ( AIM )

 கதை: நண்பர்கள் கிஷோர்( டிராவிட் செல்வம் ), கருப்பட்டி ( அஞ்சலி நாயர்), தஷ் (தீபக்) மூவரும் கல்லூரியில் சஸ்பெண்ட் ஆனதால் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் தங்குகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது ஏஞ்சல் பக்ருதியை( சித்தி இத்னானி ) கண்டு காதல் கொள்கிறான் கிஷோர். இந்த காதலை பக்ருதியின் பாட்டி சூனியக்காரக் கிழவி (தேவதர்ஷினி ) எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் கிஷோர் உள்ளிட்ட நண்பர்களை தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார். இதற்கிடையில்  நகரில்  ஒரு சைக்கோ மர்ம கொலைகள் நிகழ்த்துகிறான். அதை போலீஸ் துப்பறிய முயல்கிறது. சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள், சைக்கோ கொலைகாரன் ஆகியோரின் கதி என்னவாகிறது என்பதை கலகலப்புடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.

 சிறுவயதில் சூனியக் கிழவி, பறக்கும் தட்டு, தேவதை வருகை என்று பல்வேறு கதைகளை சொல்லவும், காமிக்ஸ் புத்தகங்கள் படித்தும் அறிந்திருக்கிறோம். படித்தும் கேட்டும் அறிந்த அந்த கதைகளை திரைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை இயக்குனருக்கு வரவே அதை அப்படியே படமாக்கி தந்திருக்கிறார்

தமிழில் குழந்தைகளுக்கான படங்கள்  அத்தி பூத்தார் போல் வரும். ஆனால் ஹாலிவுட்டில் டிஸ்னி வேர்ல்ட்  படங்கள் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவும் சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்படுகிறது அப்படி ஒரு கதையாக தான் ட்ரோன்ஸ் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி அறிமுக காட்சிகளாகவே செல்கிறது  இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பும் கலகலப்பும் மாய தந்திரங்கள் என  படுகமர்சியலாக செல்கிறது.

பிளாக் ஹோல் என்ற பெயரில் ஒரு சயின்ஸ் லேப் போன்ற அரங்கம், சூனியக்காரி வீடு  என்ற இன்னொரு அரங்கு படத்தில் பிரதான லொகேஷன்களாக அமைந்திருக்கிறது. இரண்டிலுமே இன்ட்ரஸ்டிங்கான  பொருட்களையும், மினியேச்சர் அரங்குகளையும் வைத்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார் படத்தின் ஆர்ட் டைரக்டர். அவைகளை முற்றிலுமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.

சுதாகர் கோபியின் பரிதாபங்கள் எபிசோட் களில்  வரும் டிராவிட் செல்வம்  ட்ரோன்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நடனம் நடிப்பு காமெடி என எல்லாவற்றிலும்  குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.

பக்ருதி என்ற தேவதை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி  நிஜத்திலேயே அழகு தேவதைதான். சில காட்சிகளில் அந்நியன் விக்ரம் போல் மாறி மாறி நடித்து நடிப்பு அரக்கியாக மாறி இருக்கிறார்.

சூனியக்காரி கிழவியாக தேவதர்ஷினி மொத்த பலத்தையும் காட்டி நடித்திருக்கிறார். இந்த உலகில் தன்னை யாரும் அன்பாக நேசிக்கவில்லை என்று கிளைமாக்சில்  மனம் நொந்து அழும்போது உருக வைக்கிறார்.

சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க துப்பறியும் சாம்புவாக மாறும் இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ் தனக்கு ஒரு காதலி அமையவில்லை என்று புலம்புவதும் கிளைமாக்கில் அவர் எடுக்கும் முடிவு  எதிர்பார்க்காத ஷாக்காக அமைவதுடன் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறது. அஞ்சலி நாயர்,  குரோஷி, ஆர் ஜே.தீபக்  ஏற்ற பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஜி எம் மோர்கன் தயாரித்திருக்கிறார்.

ஹரி எஸ்.ஆர். இசை காட்சிகளை தாங்கி நிற்கிறது.

:ஜெயந்த் சேது மாதவன்  கேமரா பளிச்சென காட்சிகளை பதிவு செய்திருக்கிறது.

பன் பட்டர் ஜாம் படம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர்: ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்குமான படமாக இயக்கியிருக்கிறார்.. நிற பாகுபாடு, மூலம் காதலை முடிவு செய்யும் யூத்களின்  கண்மூடித்தனமான காதலுக்கு  கண் திறந்து வைத்திருக்கிறார்.

ட்ரோன்ஸ் – கவலைகளை மறந்து குழந்தைகளுடன் ஜாலியாக பொழுதை  கழிக்கலாம்.

 

Review by K Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

Related posts

T-Series & Lahari Music bag music rights RRR

Jai Chandran

இயக்குநராக மீண்டும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

Jai Chandran

Rudhran 4th Schedule in full swing

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend