Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூரி நடித்த “கொட்டுக்காளி” படத்துக்கு சர்வதேச விருதுகள் குவிகிறது – இயக்குனர் பேட்டி

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை இயக்கியவர் பி எஸ் வினோத் ராஜ். இவர் அடுத்து கொட்டுக் காளி ” என்ற படத்தை இயக்குகிறார்.

கூழாங்கள் எப்படி கிராமப்புற பகுதியில் தந்தை மகனுக்கு இடையே நடக்கும் ஒரு பயண உறவை விளக்கியதோ அதேபோல் கொட்டுக்காளி படமும் கிராம பகுதியில் நடக்கும் ஒரு எதார்த்தமான சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.

சூரி, அன்னா பெண்  ஆகியோருடன் பல்வேறு புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படம் பற்றி இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் கூறியதாவது:

நான் இயக்கிய கூழாங்கல் ரொம்பவும் எளிமையாக எடுக்கப் பட்ட படம். அதை ரசிகர்களும் மக்களும் அவ்வளவு மனப்பூர்வ மாக ஏற்றுக் கொண்டு வரவேற்பு அளித்தார்கள்.  அந்த தைரியத்தில் தான் கொட்டுக்காளி படத்தையும் இயக்கியிருக்கிறேன்

கொட்டுக் காளி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள் இது வாய்மொழியாக பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் பயன்படுத் தும் ஒரு வார்த்தையாக வழிவழி யாக வந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு பெண்ணும் தன் வாழ்வில் ஒரு நாளாவது இந்த பெயரை  கேட்டிருப்பார. கொட்டுக் காளி என்றால்  உறுதியாக பிடிவாதமாக இருப்பவர் என்று அர்த்தம். தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவராக இருப்பார்.  இந்த படத்தில் நடிகர் நடிகைகளுடன் சேவல் ஒன்றும் ஒரு கதாபாத்திர மாகவே சித்தரிக்கப்பட்டிருக் கிறது.

இந்த கதையை சூரியிடம் சொன்னபோது அவர் மிகவும் ஈடுபாடுடன் கேட்டார். மேலும் இந்த கதாபாத்திரத்தை எப்படியாவது நியாயமாக செய்துவிட வேண்டும் என்று கூறினார். அதேபோல் யதார்த்தமாக இந்த கதாபாத்தி ரத்தில் அவர் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.  விடுதலை, கருடன் படங்களில் நடித்த பிறகு அவர் ஆக்சன் ஹீரோவாக ஆகிவிட்டார்.  இந்த கதை எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். அந்த இரண்டு படம் போல் கொட்டுக்காளியில் அவரது கதாபாத்திரம் இருக்காது. மிகவும் எதார்த்தமான நாம் அருகில் இருந்து பார்க்கும் ஒரு நபரின் செயல்பாடு போலவே அவரது நடிப்பு இருக்கும்.

கொட்டு க்காளி படத்திற்கு இசையமைப்பாளர் யாரும் கிடையாது. படப்பிடிப்பின் போது லைவாக பதிவு செய்யப்பட்ட ஒலிகள்தான் இருக்கும் பாடலும் கிடையாது

கூழாங்கல் படம் சர்வதேச விருதுகளை பெற்றது போல்  கொட்டுக்காளி படமும் பெர்லின், போர்ச்சுக்கல், ருமேனியா போன்ற நாடுகளின் விருதுகளை வென்று வந்திருக்கிறது. இன்னும் 20 நாடு களின் விழாக்களில் திரையிடுவ தற்கு தேர்வு நடந்திருக்கிறது.. அங்குள்ள மக்களே நம் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு பாராட்டி இருக்கிறார்கள் என்கிற போது நம் கலாச்சாரத்தை நம் மக்கள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இதுபோன்ற படங்களை எடுக்கும் தைரியம் எனக்கு இயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராம்,  வெற்றி மாறன் போன்றவற்களிடமிருந்து கிடைக்கிறது. இந்த பட்டியல இன்னும் நீண்டது.

கொடுக்காளி படத்தை சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரமேஷ் நேரடி ஒலிப்பதிவு அதாவது லைவ் சவுண்ட் செய்து இருக்கிறார்.  கணேஷ் சிவா எடிட்டிங் செய்திருக்கிறார். சவுண்ட் டிசைன் சுரேன்

இவ்வாறு இயக்குனர் வினோத் ராஜ் கூறினார்.

Related posts

முதல்வர் கொரொனா தடுப்பு பணிக்கு ரஜினிகாந்த் 50 லட்சம் உதவி

Jai Chandran

Let the story of War 2 be a secret – Hrithik

Jai Chandran

CHENNAI DOCTOR TOPS THE WORLD

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend